1. என்ஜீனியரிங் காலேஜிலே படிச்சு என்ஜீனியர் ஆகலாம். ஆனா ப்ரெசிடென்சி காலேஜில் படிச்சி ப்ரெசிடென்ட் ஆக முடியாது.

2. ஏர்டெல் மொபை வைச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வைச்சிருந்தாலும், தும்மல் வந்தால் ‘ஹட்ச்’ன்னுதான் வரும்.

3. ஊருக்கே கேக்கிற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும்... உன் கொறட்டையை நீ கேக்க முடியாது.

4. கோல்ட் வைச்சி கோல்ட் செயின் பண்ணலாம். ஆனால் சைக்கிள் வைச்சி சைக்கிள் செயின் பண்ண முடியாது.

5. என்னதான் 500 கி.மீ. வேகத்துல புயல் காத்து அடிச்சாலும், சைக்கிளுக்கு பம்ப் வைச்சி தான் காத்து அடிக்கணும்.

6. பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா ஃபுல் வருமா?

7. ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனால் ஸ்குரு டிரைவரால ஸ்குரு ஓட்ட முடியுமா?

8. முக்காலியில உக்காரலாம். நாக்காலியில உக்காரலாம். ஆனா தக்காளியிலே உக்கார முடியுமா?

9. என்னதான் ஜாவாலே தெரெட்ஸ் இருந்தாலும் அதை வைச்சி லுங்கி நெய்ய முடியுமா?

10. மின்னலைப் பார்த்தா கண்ணு போய்டும். பாக்கலைன்னா மின்னல் போய்டும்.