சென்னைக்கு வந்த சாண்டா சிங்கும் பாண்டா சிங்கும் மாடி பஸ்சில் ஏறினார்கள். சாண்டா சிங் கீழ்த்தளத்தில் இருக்க, பாண்டா சிங் மேல் தளத்தில் இருந்தான். அரைமணி நேரம் கழித்து மேலே சென்ற சாண்டா சிங் தனது நண்பன் முகம் வெளிறி, மிகவும் பயந்திருப்பதைக் கண்டான்.

‘ஏய் பாண்ட! என்ன ஆச்சு? ஏன் பயந்து போயிருக்கே? நான் கீழ்த்தளத்தில் ஜாலியாக மாடி பஸ் பயணத்தை ரசித்தேன்’

‘நீ ஏன் ரசிக்க மாட்டே! கீழ்த்தளத்தில் டிரைவர் இருக்கார். ஆனா இங்கே டிரைவர் இல்லாம வண்டி எங்கேயாவது போய் முட்டிக்கிடுமோன்னு பயந்து போயிருக்கேன்’