ஒரு நாள் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து ஒரு புலி தப்பி ஓடிவிட்டது. அந்த புலியை பிடிக்கும் பொறுப்பு சர்தார்ஜி ஒருவரிடம் தரப்பட்டது. புலியைப் பிடிக்க சர்தார்ஜி ஜீப்பில் கிளம்பினார். அடர்ந்த மலைச் சாலைகளில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது தப்பித்த புலி ரோட்டுக்கு வந்து, சர்தார்ஜியின் ஜீப்பைத் துரத்தத் தொடங்கியது. பயத்தில் சர்தார்ஜி வேகமாக ஜீப்பை ஓட்டினார். புலி மிகவும் பக்கத்தில் வந்துவிட்டதை பார்த்தார் சர்தார்ஜி. அப்போது ரோடு இடது புறமாகவும், வலது புறமாகவும் இரண்டாகப் பிரிந்தது.

ஜீப் வலது புறமாக திரும்பப் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, ஜீப்பை இடது புறமாக ஓட்டி சென்றுவிட்டார் சர்தார்ஜி. புலியும் அவர் எதிர்பார்த்ததுபோல் வலது புறமாகத் திரும்பி ஓடியது. ஆனால் மீண்டும் ரோடு ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்தது. இப்போது புலி ஜீப்பை தொட்டு விடும் தூரத்தில் இருந்தது. ஆனால் மீண்டும் ரோடு இரண்டாக பிரிந்தது. இப்போது சர்தார்ஜி இடது புறம் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, வலது புறமாக ஜீப்பை ஓட்டிச் சென்றுவிட்டார். புலி வலது புறமாக சென்றுவிட்டது.

சர்தார்ஜியின் துரதிஷ்டம், ரோடு மீண்டும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தது. ஆனால் ரோடு வெகு தூரத்துக்கு பிரியவே இல்லை. புலி ஒரே பாய்ச்சலில் ஜீப்பில் ஏறும் நிலையில் இருந்தது. இப்போது சர்தார்ஜி ஓவர்டேக் சிக்னல் காண்பிக்க, புலி சர்தார்ஜியின் ஜீப்பை ஓவர்டேக் செய்து கொண்டு வேகமாக சென்றுவிட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

புலிகளிலும் சர்தார்ஜி வகைகள் உண்டு என்பது.