இராணுவத்தில் சேருவோருக்கு இரயிலில் இலவச பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் இருப்பதை தெரிந்துக் கொண்ட சர்தார்ஜி, ஒரு நாள் இராணுவத்தில் சேர்ந்தான். இராணுவத்தில் பணிபுரிவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த பனிப் பிரதேசங்களில் இரவுக் காவல் புரியும் போதும், மற்ற கடினமான பயிற்சிகளின் போதுமே தான் உணர்ந்ததாக முகாமில் இருந்த மற்றொரு இராணுவ நண்பரிடம் புலம்பிக் கொண்டிருந்தாரன். அதோடு மட்டுமல்லாமல் தனக்கு பொருத்தமான அளவை விட குறைவான அளவுள்ள ஷூ கொடுக்கப் பட்டிருப்பதால், அதனை காலில் அணிந்து பணிபுரிவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் சொன்னான்.

உனக்கு பொருத்தமான ஷுவை மேலதிகாரியிடம் சொல்லி வாங்கிக் கொள்ளலாமே என கேட்ட நண்பரிடம், சர்தார்ஜி சொன்னானாம். “இந்த இராணுவ முகாமில் சேர்ந்த பின்னர், நான் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் என்றால், அது தினமும் இந்த ஷூவை கழட்டி வைக்கும் நேரம் மட்டும்தான். சரியான அளவுள்ள ஷூவைப் பெற்று அந்த மகிழ்ச்சியையும் இழக்கச் சொல்கிறாயா?”