கார் ஒன்று வேகமாக போய்க்கொண்டிருப்பதை டிராபிக் போலிஸ்காரர் பார்த்தார். அதனை தனது பைக்கில் விரட்டினார். போலிஸ் துரத்துவதைப் பார்த்ததும் அவன் இன்னும் வேகமாக ஓட்டினான். ஏறக்குறைய இரண்டு மணி நேர துரத்தலுக்குப் பின், போலிஸ்காரர் அவனை மடக்கிப் பிடித்தார்.

“ஏன் வேகமாகப் போனே? என்னைப் பார்த்ததும் நிக்காம, இன்னும் வேகமாகப் போனது எதுக்கு?”

“போனவாரம் என் மனைவி ஒரு போலிஸ்காரரோட வீட்டை விட்டுப் போயிட்டா! நீங்க தான் அவரோன்னு தப்பா நினைச்சிட்டேன்!”

“அதுக்கு எதுக்கு நிக்காமப் போகனும்?”

“இல்லை, நீங்க அவளைத் திருப்பித் தர வந்திருக்கீங்களோன்னு நினைச்சிட்டேன்!”