20 (1) ஒரு பிரிவு குற்றமென குற்றம் சாட்டப்பட்ட செயலை செய்த காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தினை மீறிய குற்றத்தை தவிர வேறு எந்த குற்றத்திற்காகவும் ஒரு நபர் தண்டிக்கப்படக் கூடாது.

மேலும் குற்றம் நடந்த காலத்தில் அமலில் இருந்த சட்டத்தின் கீழ் என்ன தண்டனையோ அதற்கு மேற்ப்பட்ட தண்டனையை வழங்கக் கூடாது.

20 (2) ஒரே குற்றத்திற்காக எந்த நபரையும் ஒரு தடவைக்கு மேல் குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கக் கூடாது.

20 (3) ஓர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓர் நபரை அவ்வழக்கில் அவர் தான் எதிரி என காட்ட அவரையே ஓர் சாட்சியாக இருக்குமாறு அவரை வற்புறுத்தக் கூடாது.

21)   அடிப்படை உரிமைகள் பற்றி அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21-ல் கூறப்பட்டுள்ள வாழ்வுரிமை பற்றி விளக்கம் :

அ.   வாழ்வுரிமை என்பது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனித மதிப்புடன் வாழக் கூடிய உரிமையையும் உள்ளடக்கியது.

ஆ.   சிறைக்கைதிகள் மிருகங்கள் அல்ல. அவர்களை மனித மதிப்புடன் நடத்த வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கக் கூடாது என சுனில் பத்ரா – எதிர் – டெல்லி நிர்வாகம் (AIR 1980 SC 1579) வழக்கில் நீதியரசர் கிருஷ்ணய்யர் உத்தரவிட்டுள்ளார்.

இ.   கைதிகள் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் போதும் திரும்ப சிறைக்குக் கொண்டு செல்லும் போதும் நீதிமன்றத்தின் உத்தரவில்லாமல் கை விலங்கிடக் கூடாது. (சுதந்திரத்திற்கான குடிமக்கள் எதிர் அஸ்ஸாம் அரசு (1995 (3) SCC 743)

ஈ.   தனிநபர் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது. தனிநபர் சுதந்திரம் என்பதன் பொருள் விரிவானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது பிரிவு 19ல் கூறப்பட்ட (காரக் சிங் – எதிர் – உ.பி.அரசு AIR 1963 SC 1295) உரிமைகளையும் உள்ளடக்கியது.

உ.   வாழ்வுரிமை என்பது வாழ்க்கைத் தொழில் செய்யும் உரிமையையும் உள்ளடக்கியது. ஒல்கா டெலிஸ் எதிர் பாம்பே மாநகராட்சி (AIR 1986 SC 180)

ஊ.   தனித்திருக்கும் உரிமை – ஓர் அடிப்படை உரிமையாகும். ஒரு நபரை இரவு நேரத்தில் கதவைத் தட்டி போலீசார் அடிக்கடி தொந்தரவு செய்தால் அது அவரின் தனித்திருக்கும் உரிமையை பறிப்பதாகும். கோவிந்த் எதிர் ம.பி. அரசு AIR 1975 SC 1399)

ஆட்டோ சங்கர் வழக்கில் அவர் நக்கீரனில் எழுதிய “வாக்குமூலம் போலீசாரால் தடுக்கப்பட்டது. போலீசாரின் செயல் பிரிவு 21க்கு எதிரானது என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆர். ராஜகோபால் எதிர் தமிழ்நாடு அரசு AIR 1995 SC 264) 

Pin It