கைது செய்வது மனித உரிமைகளின் அடிப்படையான சுதந்திரத்தில் தலையிடுகிறது. இந்திய அரசியல் சட்டம் மட்டுமல்ல, சர்வதேச மனித உரிமைகள் சட்டமும் கூட, மாநில அரசு, சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் தன்னுடைய அடிப்படைப் பணியில் எந்த ஒருவரையும் கைது செய்யும் அதிகாரத்தை அங்கீகரிக்கிறது. நியாயமான, நேர்மையான, உண்மையான சட்ட முறைகளின்படி மட்டுமே இச்சுதந்திர பறிப்பை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் 22(1)-ன்படி கைது செய்யப்படும் எல்லா நபருக்கும், எந்த அடிப்படையில் கைது செய்யப்படுகிறார் என்பதை கைது செய்யப்பட்டவுடன் தெரிவிக்க வேண்டும். கைதானவரின் விருப்பத்திற்கு இணங்க வழக்குரைஞரை கலந்து ஆலோசிக்கும் உரிமையையோ, அவர் மூலம் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையையோ மறுக்கக் கூடாது. 1973 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50-ன்படி, ஒருவரைக் கைது செய்யும் போலீஸ் அலுவலர், உடனடியாக, அவர் கைது செய்யப்படுவதற்கான குற்றத்தின் முழு விபரங்களையும் அல்லது கைதுக்கான அடிப்படைக் காரணங்களையும் தெரிவிக்க வேண்டும். இத்தேவைகள் மீறப்படும்போதே கடைப்பிடிக்கப்படுவதாக உள்ளது.

அரசியல் சட்டம் பிரிவு 22(2) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 57 இவற்றின்படி கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தின் சட்ட முறைப்படி கட்டாயம் ஆஜர்படுத்த வேண்டும் என்பது சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை.

மனித உரிமை மீறல்களில் கைது செய்தல் மற்றும் போலீஸ் நிலைய காவலில் வைக்கும்போது போலீசின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக நிறையப் புகார்கள் உள்ளன. குறிப்பாக, சட்டத்திற்கும். நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கின்ற வகையிலே, சட்ட ஒழுங்கை சிறப்பாகப் பராமரிப்பதற்காக சரியாக புலன் விசாரணை செய்யும் போலீசாரின் அதிகாரங்களைக் குறைக்காமலேயே கைது செய்வதில் வழிகாட்டும் நெறிகளை வரையறுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைது செய்வதற்கு முன்னர்

கைது

கைதுக்குப் பின்னர்

வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துதல்