இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125ன்படி –வருமானம் இல்லாத, சார்ந்து வாழக்கூடிய தாய், தந்தை, மனைவி, மணமாகாத மகள், 18 வயது நிரம்பாத மகன் ஆகியோரைக் காப்பாற்றுவது சம்பாதிக்கும் ஆண்மகனின் கடமையாகும். எனவே தந்தையை மகன் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஜீவனாம்சம் பெறமுடியும். மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்கும் கணவனின் கோரிக்கையை சில வழக்குகளில் நீதிமன்றம் ஏற்று தீர்ப்பளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.