திருமணத்திற்கு பிறகு முதலிரவு உள்ளிட்ட எந்நாட்களிலும் நியாயமான காரணம் எதுவுமின்றி உடலுறவு கொள்ள ஆணோ, பெண்ணோ மறுப்பது கொடூரமானது என்றும் விவாகரத்து பெறுவதற்கு அக்காரணம் மாத்திரம் போதுமானது என்றும் பரபரப்பான தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

                   திருமணம் ஆகியும் மனைவி உடலுறவு கொள்ள மறுத்ததால் பாலியல் வறட்சியால் விவாகரத்து கோரியவருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்த தில்லி நீதிமன்ற நீதிபதி கைலாஷ் கம்பீர் இச்செயல் கொடூரமானது என்று தன் கண்டனத்தையும் பதிவு செய்தார்.

                   கம்பீர் வழங்கிய தீர்ப்பில் இவ்வழக்கில் தான் உறவுக்கு அணுகும் போதெல்லாம் வெறுத்தொதுக்கிய தன் மனைவி வேண்டா வெறுப்பாக மரக்கட்டையை போலவே இருந்ததாக கணவர் கூறியதை மனைவியால் மறுக்க முடியவில்லை.  மேலும் முதலிரவு அன்று கூட எவ்வித நியாயமான காரணமும் இன்றி ஒத்துழைக்க மறுத்தது கொடூரமானது என்று கூறினார்.

                   மேலும் திருமணத்தின் அடிப்படையே தாம்பத்திய உறவு என்றும் உறவில்லா திருமணம் அர்த்தமற்றது என்றும் கீழ் நீதிமன்றம் கூறியதை தன் தீர்ப்பில் மேற்கோள் காட்டிய நீதிபதி கம்பீர் தாம்பத்திய உறவில்லா திருமணம் என்பது ஒரு சுவையற்ற உறவாகும் என்றும் கூறினார்.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)