ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:

கிழக்குத் திமோர்

போர்ச்சுகலின் காலனி நாடாக இருந்த கிழக்குத் திமோர் “1975 ஆம் ஆண்டு நவம்பர் 28” ஆம் நாள் தன்னைச் சுதந்திர நாடாகப் பிர கடனம் செய்தது. அந்தப் பிரகட னத்தை மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய - லெனினிய அரசுகள் அங்கீகரித்தன. மக்கள் சீனம் அங்கீ கரித்தது. அவுஸ்திரேலியா, போர்ச்சுக் கல், இந்தோனேசியா ஆகியவை அங்கீகரிக்கவில்லை.

அதே நேரத்தில் இந்தோனேசியாவினால் அந்நாடு ஆக்கிரமிக்கப்பட்டு அந்நாட்டினது ஒரு மாகாணமாக கிழக்குத் திமோர் மாற்றப்பட்டது.

ஆனால், கிழக்குத் திமோர் மக்கள் இரு தசாப்த காலமாக விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் நாளன்று கிழக்குத் திமோரில் மேற்பார்வையில், இந்தோனேசியாவி லிருந்து கிழக்குத் திமோர் பிரிவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரு வாரியான மக்கள், கிழக்கு திமோரின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாளன்று கிழக்குத் திமோரை ஒரு தனிநாடாக அனைத்துலகம் ஏற்றுக் கொண்டது.

தென் கமுரூன்

கமரூன் கூட்டமைப்பில் 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாள் தென் கமரூன் இணைக்கப்பட்டது. தென்காமரூனானது ஆங்கில மொழி பேசுவோரையும் இதர பகுதிகள் பிரெஞ்சு மொழி பேசுவோரையும் கொண்டதாக இருந்தது.

இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாளன்று வாக்கெடுப்பின் மூலம் கமரூன் கூட்டமைப்பு “ஒற்றையாட்சி” முறைக்கு மாறி யது. தென் கமரூன் பிரதேசம் சுயாட்சியை இழந்தது. கமரூன் குடியரசினது வடமேற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களாக தென் கமரூன் மாற்றமடைந்தது. கூடுதலாக சுயாட்சி உரிமை கோரி தென் கமரூன் பிரதேசத்தில் போராடினர். 1961 ஆம் ஆண்டு அமுலில் இருந்த கூட்டமைப்பு முறை மீள உருவாக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கமரூன் நாட்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு தென் கமரூன் பிரதேசம் விடுதலை கோரியது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் நாள் தென் கமரூன் மக்கள் ஒன்றியத்தினால் அம்பஜானியா குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையை போலவே விடுதலைக்குப் போராடும் அல்லது அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் நாடுகளினது ஒன்றியமாக யு.என்.பி.ஓ. என்ற அமைப்பு செயல்படுகிறது. இதில் கடந்த 2005 ஆம ஆண்டு முதல் தென் கமரூன் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

இதேபோல் செசன்யா, புண்ட்லாந்து, நாகர்னோ கராபக், தென் ஒசீட்டியா, அப்கைசியா மற்றும் டிரான்ஸ்னிஸ்திரியா ஆகிய பிரதேசங்களும் 1990 ஆம் ஆண்டு முதல் தன்னிச்சையாக தமது சுதந்திர நாட்டுப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளன.

தோல்வியில் முடிந்த சுதந்திரப் பிரகடனங்கள்

அமெரிக்க பிரதேசத்தில் உள்ள கரோலினா 1712 ஆம் ஆண்டு இரண்டு தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளாகப் பிரிந்தன.

1776 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாளன்று தெற்கு கரோலினா, பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்து தனக்கான சுய அரசாங்கத்தை அமைத்தது. 1788 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 8 ஆவது மாகாணங்களில் ஒன்றாக அது இணைந்தது.

இருப்பினும் 1860 ஆம் அண்டு டிசம்பர் 20ஆம் நாள், அமெரிக்கக் கூட்டமைப்பி லிருந்து வெளியேறுவதாக தெற்கு கரோலினா சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க உள்நாட்டு யுத்தம் உருவானது. அதன் பின்னர் அமெரிக் கக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.

குடியேற்றப்பட்ட வெள்ளை இனத்தவரின் ‘ரொடீசியா’ பிரகடனம்

பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத் தின் உரிமையாளரான சீசில் ரொட் என்பவர், ஆப்பிரிக்காவின் ஜிம்பாவே மற்றும் ஜாம்பியாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கங்களை வெட்டி எடுக்கும் உரிமை பெற்றார்.

உரிமை பெற்ற சீசில் ரொட் ஏராளமான வெள்ளை இனத்தவரை ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவில் குடியேற்றினார். இதனால் 1893 இல் யுத்தம் வெடித்தது.

ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவின் பெரும் பகுதிகளை ரொட், தனது சொந்த கூலிப்படையின் துணையுடன் கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஜாம்பியா சீசில் ரொட்டின் பெயரால் வடக்கு ரொடீசியாக வும், ஜிம்பாப்வே தெற்கு ரொடீசியாகவும் மாறின. ரெண்டு ரொடீசியாக்களுமே 1911 ஆம் ஆண்டு வரை தனித்தே இயங்கின.

1923 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் செல்வாக்குட்பட்ட பகுதியில் அமைந்த சுயாட்சி அரசாங்கமாக தெற்கு ரொடீசி யாவை பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் மாற்றியது. 1924 ஆம் ஆண்டு வடக்கு ரொடிசீயாவின் நிர்வாகத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒப்படைத்தது.

1930 ஆம் ஆண்டு வெள்ளை இனத்தவரின் மேலாதிக்க ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. முறைசார் வர்த்தகங்கள் மற்றும் தொழில் களில் ஈடுபட்ட பூர்வகுடி கறுப்பின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகை யால் தங்களது சொந்த மண்ணில் வெள்ளை இனத்தவர்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளப் பட்ட பண்ணைகளிலும் தங்கச் சுரங்கங் களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தாக வேண்டிய நிலைக்கு பூர்வகுடி கறுப்பின மக்கள் தள்ளப்பட்டனர்.

1953 ஆம் ஆண்டு தெற்கு ரொடீசிய காலனித்துவ சுயாட்சி அரசாங்கம் மற்றும் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழாக வடக்கு ரொடீசியா மற்றும் நியஸலாந்த் (தற்போதைய மலாவி) ஆகிய இணைக்கப்பட்டு ரொடீசியக் கூட்டரசு உருவாக்கப்பட்டது.

தொடர்ந்தும் பூர்வகுடி கறுப்பின மக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகினர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம், ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் ஆகியவை பூர்வ குடி கறுப்பின மக்களுக்காகப் போராடின. அப்போது ஜிம்பாப்வே பூர்வகுடி கறுப்பின மக்களின் விடுதலை இயக்கங்களைத் தடை செய்த தெற்கு ரொடீசிய நிர்வாகம், அதன் தலைவர்களை சிறையிலடைத்தது.

1960களில் ஆப்பிரிக்காவிலிருந்த பிரித் தானிய காலனி நாடுகள் விடுதலை பெற்றன. இதனால் ரொடீசியக் கூட்டரசு கலைந்தது.

1963 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழிருந்த வடக்கு ரொடீசியாவான ஜாம்பியா விடுதலை பெற்றது. நியாஸலாந்த் என்ற மலாவியும் விடுதலை பெற்றது.

(தொடரும்)

(நன்றி : புரட்சி பெரியார் முழக்கம் ஜூன் 2009)