கோமா நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு உள்ளே  நினைவிருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல்கூட இருக்கலாம். மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்திருப்பவரும்உணர்வில்லாமல் இருப்பார் அதே சமயல் நினைவில்லாமலும் இருப்பார். இந்த வித்தியாசம் மிக முக்கியம். கோமா நிலையிருப்பவர் நினைவுடன் இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஸ்கேன் எடுத்து மூளையைப் பார்க்க வேண்டும். இதை விட எளிய முறையை அர்ஜென்டினா நாட்டு மருத்துவர்கள் வேறு நாட்டு மருத்துவர்களுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

கோமா நிலை நோயரின் கண்களைத் திறந்து லேசாக காற்றை பீய்ச்சி அடிப்பார்கள். அதற்கு முன் மெல்லிய மணி ஓசையைக் கேட்கச் செய்வார்கள். இப்படி மூன்று நான்கு முறை செய்த பிறகு வெறும் மணி ஓசை சப்தம் கொடுத்தாலே போதும் நோயர் கண் இமைகளை அசைப்பார். காற்று அடுத்து படுமே என்று அவர் உணர்ந்திருக்கிறார் என்பதற்கு இது அடையாளம். இதிருந்து கோமா நிலையில்கூட மனிதன் ஐவகை உணர்வுகளையும் கவனிக்க முடியும் என்பது தெரிகிறது.

-மு.குருமூர்த்தி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It