நினைவு வலுப்பெற மூக்கில் ஸ்ப்ரே
உணர்வுப்பூர்வமான தகவல்கள் அல்லது சிக்கலான செய்முறைகள் நினைவில் பதியவேண்டுமானால் முடிந்தவுடன் நல்ல தூக்கம் போடவேண்டும். தூக்கத்தில் 'விழியசைவு உறக்கம்' என்ற ஒரு நிலையுள்ளது. அப்போது கனவுகள் வரும். அதன் பிறகு கற்றவை நினைவில் நிலைப்படுகின்றன.
படித்த களைப்பில் குழந்தை தூங்குகிறது என்று பெற்றவர்கள் பெருமையாக சொல்க்கொள்வார்கள். உண்மையில் குழந்தை தூக்கத்தில்தான் உண்மையாகவே கற்றுக்கொள்கிறது. படித்ததெல்லாம் நரம்பு செல்களில் பதிகின்றன நேரம் அது. ஏட்டுச் சுரக்காய் பாடத்தைக் காட்டிலும் விளையாட்டு நுணுக்கங்கள், ஓவியம் பாட்டு நடனம் போன்ற கலைகள் தூக்கத்தில் பசுமரத்தாணிபோல பதிகின்றன.
நான் சொல்ல வந்தது இதுவல்ல. மார்ஷல் என்ற ஜெர்மனியர் ஒரு ஸ்ப்ரே மருந்தைத் தயாரித்திருக்கிறார். இதை தூங்குவதற்கு முன்பு மூக்கில் அடித்து முகர்ந்து கொண்டால் மூளையில் கற்றவை நன்றாக பதிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்.இன்டெர்யூக்கின் 6 என்பது நமது உடலிலேயே சுரக்கும் கெமிக்கல். இது வலி, வீக்கம், அலர்ஜி தொடர்பான சிக்னல்களை உடலில் பரப்பும் கெமிக்கல். இதைப் பயன்படுத்திதான் அந்த ஸ்ப்ரே மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
உடலின் இம்மியூன் தொகுப்பை சமப்படுத்தும் பொருள் எப்படி நினைவுகளை நிலைப்படுத்துகிறது என்பது புதிராக உள்ளது. இந்த மனுஷன் இதை எப்படி கண்டுபிடித்தான் என்பது எனக்குப் புதிராக இருக்கிறது.
- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

brain_250உணர்வுப்பூர்வமான தகவல்கள் அல்லது சிக்கலான செய்முறைகள் நினைவில் பதியவேண்டுமானால் முடிந்தவுடன் நல்ல தூக்கம் போடவேண்டும். தூக்கத்தில் 'விழியசைவு உறக்கம்' என்ற ஒரு நிலையுள்ளது. அப்போது கனவுகள் வரும். அதன் பிறகு கற்றவை நினைவில் நிலைப்படுகின்றன.

படித்த களைப்பில் குழந்தை தூங்குகிறது என்று பெற்றவர்கள் பெருமையாக சொல்க்கொள்வார்கள். உண்மையில் குழந்தை தூக்கத்தில்தான் உண்மையாகவே கற்றுக்கொள்கிறது. படித்ததெல்லாம் நரம்பு செல்களில் பதிகின்றன நேரம் அது. ஏட்டுச் சுரக்காய் பாடத்தைக் காட்டிலும் விளையாட்டு நுணுக்கங்கள், ஓவியம் பாட்டு நடனம் போன்ற கலைகள் தூக்கத்தில் பசுமரத்தாணிபோல பதிகின்றன.

நான் சொல்ல வந்தது இதுவல்ல. மார்ஷல் என்ற ஜெர்மனியர் ஒரு ஸ்ப்ரே மருந்தைத் தயாரித்திருக்கிறார். இதை தூங்குவதற்கு முன்பு மூக்கில் அடித்து முகர்ந்து கொண்டால் மூளையில் கற்றவை நன்றாக பதிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார். இன்டெர்யூக்கின் 6 என்பது நமது உடலிலேயே சுரக்கும் கெமிக்கல். இது வலி, வீக்கம், அலர்ஜி தொடர்பான சிக்னல்களை உடலில் பரப்பும் கெமிக்கல். இதைப் பயன்படுத்திதான் அந்த ஸ்ப்ரே மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

Pin It