தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும். மாதவிலக்கு நின்றதும், இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், செக்ஸில் ஆர்வம் குறைவதோடு பெண் உறுப்பின் பசைத்தன்மைக் குறைந்து இறுக்கமாகிவிடுகிறது. இதனால்தான் உறவின்போது வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது. மருந்து வகைகள், க்ரீம் போன்றவற்றின் மூலமாக இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியும். மருத்துவரை நேரடியாக அணுகி, அவர் பரிந்துரைக்கும்  மருந்து வகைகளை உட்கொண்டால் நல்லது.