நவீன சாரங்கதரா (1936)

மனித வாழ்க்கையில் உறவு முறைகள் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்ற வட்டத்துக்குள் உள்ளடங்கியதானக இருக்கின்ற வரையில் வாழ்க்கை மேன்மைப்படுகிறது.
தாய், தந்தை, மகன், மருமகள், என்று அந்தந்த உறவுகள் அந்தந்த முறைகளில் அர்த்தப்பட வேண்டும். இதில் எது வேறு பட்டாலும், மீறப்பட்டாலும் வாழ்க்கை விபரீதமாகி சீர்கெட்டுப் போகிறது. இந்த அச்சம் தரும் கருத்தை வலியுறுத்தி 1936-ல் நவீன சாரங்கதரா என்ற ஒரு படம் வெளி வந்து படம் பார்ப்பவர்கள் இடையில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் அது உறவு மீறலை பின்னணியாகக் கொண்ட கதை யாகும். இதில் சாரங்கதரனாக எம்.கே.தியாக ராஜ பாகவதரும், சித்ராங்கியாக எஸ்.டி. சுப்புலட்சுமியும் நடித்திருந்தார்கள். எஸ்.எஸ். மணி பாகவதர் நரேந்தினாகவும் , சுமந்தரனாக எம்.எஸ். சுப்பிரமணியமும், சித்ராங்கியின் தந்தையாக ஜி. பட்டு ஐயரும், இந்து பாலா என்ற வடநாட்டு நடிகை ஒருவர் சந்நியாசினி யாகவும் சிறப்பாக நடித்தார்கள். இந்தப் படத்தை டைரக்டர் கே. சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். பாபநாசம் சிவன் 41 பாடல்களை எழுதியிருந்தார்.

பவளக்கொடி படத்திற்குப் பிறகு பாகவதர் நடித்த இரண்டாவது படம் நவீன சாரங்கதரா இதில் கல்கத்தா மிஸ் கோமளா பார்ட்டியின் குரூப் டான்ஸ் பார்க்கத்தக்கது என் வாசகம் இந்தப் படத்தில் விளம்பரத் தில் சேர்க்கப்பட்டிருந்தது.

இதே காலகட்டத்தில் லோட்டஸ் பிக்சர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தார் கொத்தமங்கலம் சீனுவைச் சாரங்கதரனாகவும் டி.எம். சாரதாம்பாளைச் சித்ராங்கியாவும் நடிக்க வைத்து சாரங்கதராவை ஹோமி வாடியா, வி.எஸ.கே. பாதம் எம்.ஏ. ஆகியோரின் டைரக்ஷனில் மும்பை வாடியா மூவிடோன் தயாரித்திருந்தார்கள். படம் வெற்றி பெறவில்லை. மாறாக தியாகராஜ பாகவதர் நடித்த நவீன சாரங்கதராதான் வெற்றி பெற்றது. நாடகமாக நடிக்கப்பட்ட இந்தக் கதையில் சில மாற்றங்களைச் செய்து படமாக எடுத்தார்கள். அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். 25 வாரம் ஓடி வெள்ளிவிழா கண்டது.

அஸ்தினாபுரத்து மன்னன் நரேந்திரன், வாலிபப்பருவம் அடைந்து தனது மகன் சாரங்கதரனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறான். அதற்காகத் தனது ஆஸ்தான அரசவை குருவை அயல்நாடுகளுக்கு அனுப்பு கிறான். அழகான பெண்களாகத் தேடி அதில் தனது மகன் சாரங்கதரனுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அழைத்த வரச் சொல்லுகிறான்.

பல தேசங்கள் அலைந்து திரிந்து அரசவை குரு சித்ராங்கராஜனின் மகள் சித்ராங்கியைத் தேர்ந்தெடுக்கிறார். சித்ராங்கியும் குருவிடம் இருக்கும் சாரங்கதரனின் ஓவியத்தைப் பார்த்து காதல் கொள்கிறாள். வாழ்ந்தால் இவனுக்கு மனைவியாக வாழ்வேன் அல்லது சாவேன் என்று சபதம் கொள்கிறாள். மனத்தளவில் அவனை கணவனாக ஏற்றுக்கொண்டு அஸ்தினாபுரத்திற்குத் தந்தையின் சம்மதத் துடன் வருகிறாள். மகனுக்காகத் தேர்ந்தெடுக் கப்பட்ட மருமகளைப் பார்ப்பதற்காக மாமனார் நரேந்திரன் வருகிறார். வந்து பார்த்ததும் அவருக்குச் சபல புத்தி ஏற்படுகிறது. மருமகளை தானே மணந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். தனது ஆசையை மருமகளாக வந்தவளிடம் தெரிவிக்கிறார். அவளும் வேறு வழியின்றி இப்போது தான் விரதம் இருப்பதாகவும அது முடிந்தவுடன் ஏற்றுக் கொள்வதாகவும் பொய் சொல்கிறாள். இதற்கிடையில் சாரங்கதராவும் சித்ராங்கியும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படு கிறது. அதைப் பார்த்த மன்னன் நரேந்திர னுக்கு மனதில் பயம் வந்து விடுகிறது. இரு வரும் சந்தித்தது தவறான உறவுக்காக என்று சொல்லி தனது மகனின் கைகளை வெட்டி எறிகிறார். சிறையில் அடைக்கிறார். மரு மகளின் மீது மோகம் கொண்ட மன்னனை மக்கள் எதிர்க்கிறார்கள்.

திடீரென்று ஒரு சந்நியாசினி தோன்றி கை இழந்த சாரங்கதரனின் உடலமைப்பை சரி செய்கிறாள். சாரங்கதரனையும், சித்ராங்கி யையும் சேர்த்து வைக்கிறாள். மதி மயங்கிய மாமனாரின் ஆசைக்கு உட்படாமல் தனது ஆசைக்குட்பட்ட சாரங்கதரனுடன் சித்ராங்கி சிறப்பாக வாழத் தொடங்கினாள். இந்தப் படத்துக்கான மறு தணிக்கை 1953-ஆம் ஆண்டில் நடந்தது.

அரங்கேற்றம் (1973)

கூட்டுக் குடும்பத்தில் மூத்தவளாக இருக்கும் ஒருத்தி தனது தம்பியின் வேலைக்காகச் சிபாரிசு பிடிக்கப் போக அதற்கு லஞ்சமாக தனது கற்பையே இழக் கிறாள். அதன்பிறகு குடும்பச் சூழ்நிலை காரணமாக விலைமாதுவாகவே மாறிவிடு கிறாள். இத்தனையும் சடங்கு, சம்பிரதாயங்கள், கௌரவம் பார்க்கும் சாஸ்திரி குடும்பத்தில் நடக்கிறது.

இது 1973-ஆம் ஆண்டு வெளிவந்த கலாகேந்திராவின் அரங்கேற்றம் படத்தின் அடிப்படைக் கதையாகும். டைரக்டர் கே. பாலசந்தர் பரபரப்பூட்டும் வகையில் திரைக் கதை அமைத்து அரங்கேற்றத்தை உருவாக்கி யிருந்தார். துரைசாமி, செல்வராஜ், திருமதி கோவிந்தராஜன் ஆகியோர் இணைந்து இப் படத்தைத் தயாரித்திருந்தனர்.

இதில் லலிதா என்ற விலைமாது கதாபாத்திரத்தில் துணிந்து நடித்த படம் பார்ப்பவர்களிடையே பரபரப்பூட்டினார். நடிகை பிரமிளா, புரோகிதர் தொழிலை செய்ய மறுக்கும் ராமு சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் எஸ்.வி.சுப்பையா, உடையார் சாதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற கதாபாத்திரத்தில் சிவக்குமார் சிறப்பாக நடித்திருந்தார். அம்மாவாக எம்.என். ராஜமும், தங்கைகளாக ஜெயசித்ரா, ஜெயசுதா, ஆகியோரும் நடித்தனர். தம்பியாக நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.

விலைமாதுவாக மாறிய பெண் பிராமண வகுப்பைச் சேர்ந்தவள் என்று படம் உருவாக்கப்பட்டிருந்தால் பிராமணர் சங்கத்தினர் இதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். தடை செய்யச் சொல்லி கோர்ட்டுக்கும் போனார்கள். ஆனாலும் எல்லாத் தடைகளையும் மீறி வெளிவந்து நூறு நாள் ஓடி விழாக் கொண்டாடியது இப்படம். இப்படத்துக்குப் பிறகு டைரக்டர் கே.பாலசந்தருக்கு இயக்குநர் சிகரம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு வாலியல் சம்பந்தப்பட்ட கதைகளையே பெரிதும் படமாக்கத் தொடங் கினார் அவர். இந்தப் படம் தெலுங்கில் ஜீவிதரங்கமு என்ற பெயரிலும், இந்தியில் ஆய்னா என்ற பெயரிலும் வெளியாகியது. வி. குமாரின் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் இனிமையாக இருந்தன. வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கின்ற ஏ சான்றிதழை இந்தப் படம் பெற்றிருந்தது. ஆனாலும் அனைத்து தரப்பினரும் பார்க்கின்ற அளவுக்குப் பத்திரிகைகளின் ஆதரவான விமர்சனமும், படத்தைத் தடைசெய்து விடுவார்களோ என்ற எதிர்பார்ப்பும் இந்தப் படத்தின் வெற்றிக்கு உதவியது.

புரோகிதர் தொழிலைக் கைவிட்ட ராமு சாஸ்திரி ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் தலைவர். அவருக்கு வருமானம் இல்லாததால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பத்து வயிறுகள் காய்கின்றன. பல கோடி ஆசைகள் மட்டும் அவர்களிடம் வளர்கிறது. இந்தக் குடும்பத்தின் மூத்த மகள் லலிதா குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கத் தொடங்கு கிறாள். தனது தம்பியின் வேலைக்காகச் சிபாரிசு பிடிக்க சென்னைக்குப் போகிறாள். அங்கே தனது கற்பை இழந்துவிடு கிறாள். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக விலை மாதுவாகவே மாறிவிடுகிறாள். இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் மறைத்துவிட்டு தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றுவதாக பொய் சொல்லி வீட்டுக்குப் பணத்தை அனுப்புகிறாள்.

எல்லாப் பிரச்சினைகளும் நல்ல படியாகத் தீர்ந்து வருகின்றன. இந்தச் சூழ் நிலையில் தனது தங்கையின் திருமணத்துக் காக ஊருக்கு வருகிறாள். அவளது மேலாமை சரிந்து கிடப்பதைப் பார்த்து அவளது தோழி ஒருத்தி யாரோ ஆம்பள வர்றாங்க துணியைச் சரியாக போட்டுக்கொள் என்று கூற அதற்கு லலிதா ஆம்பளைங்கிற விஷயமே மறுத்துப் போச்சு, அதனாலதான் மறைக்கத் தோணல என்று கூறுகிறாள். இதைக் கேட்ட தாய் அதிர்ச்சியடைகிறாள். அவளது சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறாள். குடும்பமே அதிர்ச்சியடைகிறது.

அதன்பிறகு லலிதா தனது தொழிலை மறந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள நினைக்கிறாள். உடையார் குடும்பத்தைச் சேர்ந்த தங்கவேல் திருமணம் செய்துகொள்ள
முன்வருகிறாள். ஆனால் லலிதாவின் மனசாட்சி அதற்கு உடன்படவில்லை. மண மேடையிலிருந்து பைத்தியம் பிடித்தவள் போல் சிரித்துக் கொண்டே ஓடுகிறாள்.

ஒரு அபலைப் பெண்ணின் கண்ணீர்க் கதையை இப்படி அரங்கேற்றம் செய்தார் டைரக்டர் கே. பாலசந்தர்.

சின்னவீடு (1985)

பொதுவாகவே ஒருத்தருக்கு எவ்வளவு அழகான பெண்ணை திருமணம் செய்து வைத்தாலும் அடுத்த வீட்டுப் பெண்ணை ஏக்கப் பார்வை பார்ப்பதும் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பார்த்து சபலப் படுத்தும் இன்றைய சில ஆண்களின் முக்கிய வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லாத இளை ஞனுக்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பதும் அதிலும் அப்பெண் அழகில்லா தவளாகவும் அமைந்துவிட்டால் என்ன வாகும்?

பார்க்கிற பெண்களெல்லாம் அழகாகத் தெரிவார்கள். இதிமல் ஒரு அழகான பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக் காமல் இருந்துவிட்டால் அவளுடனே வாழ்ந் துவிட மாட்டோமா எனத் தோன்றும். அப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு அழகான பெண்ணிடம் சிக்கி அவளையே சின்ன வீடாக்கி பிறகு பிரச்சினைகளையே வாழ்க்கை யாக்கிக் கொண்ட ஒரு நாயகனின் கதைதான் ‘ சின்னவீடு ’

1985 - ஆம் ஆண்டு வெளிவந்த சின்னவீடு படத்தை கதை, வசனம், எழுதி இயக்கியவர் கே.பாக்யராஜ் ஜெயவிஜயா மூவிஸ் சார்பில் சி.கே. கண்ணன், கே. ராமச்சந்திரன் இணைந்து தயாரித்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருந்தன. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை பி.ஆர்.விஜயலட்சுமி கவனித்தார். கே.பாக்யராஜின் மனைவியாக கல்பனா நடித்து அறிமுகமானார். சின்ன வீடாக அனு நடித்தார். மற்றும் கே.கே. சௌந்தர், கோவைசரளா, ஜெய்கணேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.

மதனகோபால தன் விருப்பத்துக்கு மாறாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளா கிறான். அவனது பெற்றோரின் நிர்பந்தமே இதற்குக் காரணம் மனைவியாக வந்து அமைந் தவளோ அழகில்லாதவள். குண்டாக இருப்பவள். அவளுடன் வாழவே மதன கோபாலுக்குப் பிடிக்கவில்லை.

இந்த விரக்கியின் விளைவாக திசை மாறுகிறான். தடம் புரள்கிறான். ஒரு சூழ் நிலையில் அழகான ஒரு பெண்ணை சந்திக் கிறாள். அவளைப் பின் தொடர்கிறான். எந்த எதிர்ப்பும் வராததால் அவளிடம் நெருங்கிப் பேசுகிறான். பழகுகிறான். அவளும் அவனை மடக்கி அவனிடம் உள்ள சொத்துகளை பறித்துக் கொள்ள திட்டமிடுகிறாள். இது தெரியாமல் மதனகோபால் அவளிடம் மயங்கிக் கிடக்கிறாள். அவளை தனது ஆசை நாயகியாக வைத்துக்கொள்கிறான்.

இந்த சின்னவீடு பிரச்சினை பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இறுதியாக அந்த
அழகான பெண்ணிடமிருந்து ஆபத்தையும், மோசடியையும் அவளது தவறான நடத்தையையும் புரிந்து கொள்கிறான். வாழ்க்கையில் இருக்கின்ற இன்ப துன்பங்களை பகிர்ந்துகொண்டு வாழ அன்பான மனைவி வேண்டுமே தவிர, அழகை மட்டும் காட்டி மயக்குகிற ஆபத்தான பெண் தேவையில்லை என்பதை புரிந்துகொண்டு தெளிவடைகிறாள். தனது உத்தமமான உள்ளத்தால் அழகான, அன்பான, மனைவி யுடன் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்குகிறான்.

(நன்றி : மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)