ஆணுக்குப் பாலியல் இச்சையைத் தூண்டி, உடலுறவு கொள்ள அவனை உந்துவது டெஸ்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன். இதுதான் ஆணுக்கு ஆண் தன்மையை வழங்குகிறது.

விந்தணுவகத்தில் இரண்டு தனித்தனிப் பகுதிகள் உள்ளன. ஒன்றில் விந்தணு உற்பத்தியாகும். மற்றொன்றில் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி ஆகும். இந்த ஹார்மோன் உற்பத்தி குறையும்போது ஆணுக்குப் பாலியல் இச்சை குறைய ஆரம்பிக்கும்.

குழந்தை இல்லாத தம்பதியர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால்தான் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாகும். அப்படி இல்லையென்றால், இருவரது உடலும் கருத்தரிப்புக்குத் தகுதியானதாக இருந்தாலும், குழந்தைப்பேறு உண்டாகாது. எனவே ஆணுக்கு உடலுறவில் நாட்டம் இருப்பது மிக முக்கியம்.

ஆணுக்குப் பாலுறவில் நாட்டமில்லையென்றால், அதற்கு டெஸ்டோஸ்டிரான் குறைபாடுதான் காரணம் என்பதை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து விட முடியும். தகுந்த சிகிச்சையின் மூலம் இக்குறைபாட்டை நிவர்த்திக்கவும் முடியும்.