பித்தப்பையில் கல்போன்ற கடும் பொருள் (Gall stones) பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும். வயதுக்கேற்ற எடைக்கும் கூடுதலான எடை இருக்கும்போதும், குழந்தைகள் பிறப்பதற்கு முன் நிறைகர்ப்பம் இருக்கும்போதும் கல்போன்ற கடும் பொருள்கள் தோன்றக் கூடும். கருவுற்ற பெண்களுக்கு நிறைகர்ப்ப காலத்தில் பேறுகால கொலஸ்ட்ரால் (cholesterol) மிகுந்த விகிதத்தில் கடும் பொருள்களை உருவாக்க உதவும். இந்தக் கொலஸ்ட்ரால் ஈரக்குலையில் உண்டாகி உட்செல்ல வேண்டிய எல்லாப் பொருள்களும் செல்ல முடியாதவாறு தடுக்கக்கூடும். ஈரற்குலையும் சர்க்கரையைச் சேமிக்கும். ஆனால் மிகு எடை உடையோர் தன் தேவைக்கும் அதிகமான சர்க்கரையை உட்கொள்வர். ஆகையால் ஈரற்குலை சரிசம நிலையில் செயலாற்ற இயலா நிலையை அடைய வாய்ப்பு ஏற்படுகிறது.

gallstones_370கல்லீரலின் கீழ்ப்பக்கம் கிடக்கும் பித்தப்பை (gall bladder) பித்த நீரை வடித்துச் சேமித்து வைத்துப் பிறகு அதனைச் குடல்களுக்குத் தெரிவிக்கும். ஆயினும் அக்கடும் கற்பொருள்கள் பித்த நீர்க் குழாயையோ அல்லது பித்த நீர்ப்பையையோ அடைத்து விட்டால் கடுமையான வலி விளையும். இந்த வலி விலா எலும்புகளின் கீழ் வலதுபுறம் மேற்பகுதி முதல் தோள் வரை சூழ்ந்து பரவும். அந்த வலி பித்தக் குழாயிலிருந்து கடும் கற் பொருள் வெளிவரும் வரை தொடர்ந்து இருக்கும். கல் வெளிவந்த பின்பே நோய் நீங்கும். அந்தக் கடும் கற்பொருள் அப்பிட்டு இறுக்கப்பட்டிருப்பின் பித்த நீர்ப்பையில் அழற்சி அல்லது தொற்று (infection) ஏற்பட ஏதுவாகும்.

ஆகவே பித்தப்பை கடும் கற்பொருள் சிகிச்சை வழக்கமாக அறுவைச் சிகிச்சைக்கே வழி வகுக்கும்; ஏனெனில் அந்தக் கடும் பொருளைக் கரைக்கும் மருந்துகள் இதுவரை அறியப்படவில்லை. மாத்திரைகள் வலியைக் குறைக்கவும் குழாய்த் தசைகளை மென்மை யாகவும் தளர்வாகவும் வைத்துக் கொள்ளவுமே உதவக் கூடும். பல நேரங்களில் அடிக்கடி பெருங்கற்களை விடச் சிறு கற்களே மிகத் தொல்லை தரும். ஏனெனில் சிறு கடும் பொருள்கள் வெளிவந்து பித்தநீர்க்குழாயை அடைக்காமல் பித்த நீர்ப்பையுள்ளேயே தங்கிவிடுகின்றன.