ஆத்மா என்பதில்....

periyar 4501. மனித ஆத்மா மாத்திரம்தான் மத சம்பந்தங்களுக்கு- அதாவது கடவுளுக்கும் ஆத்மாவுக்குமுள்ள சம்பந்தத்திற்காக ஏற்பட்ட மதங்களுக்குச் சேர்ந்ததா? அல்லது புல், பூண்டு, அμ, ஜந்து, ஊர்வன, பறப்பன, நகர்வன , நீர் வாழ்வன முதலிய ஜந்துக்களின் ஆத்மாக்கள் என்பவைகளும் அதில் சேர்ந்தவைகளா?

2. இந்தப்படி மனித ஆத்மாவுக்கும் மற்றைய ஆத்மாக்களுக்கும் வித்தியாசங்கள் உண்டா? அல்லது எல்லாம் ஒரே தன்மையானதுதானா?

3. மனித ஆத்மா, மனித சரீரத்தில் இருக்கும் போது அது செய்த வினைக்கு ஏற்ற பலனை, சரீரத்தை விட்டுப் பிரிந்தபிறகு அனுபவிக்கின்றது என்பது போலவே மற்ற புல், பூண்டு, ஊர்வன, பறப்பன , நகர்வன, நீர் வாழ்வன, அனு ஜந்துக்கள் முதலியவைகளின் ஆத்மாக்களும் சரீரத்தை விட்டு விலகிய பிறகு அவைகளின் வினைக்குத் தகுந்த பலனை அனுபவிக்கின்றனவா?

4. இந்த ஆத்மாக்களில், மேற்கண்ட ஜந்துக்கள் ஒவ்வொன்றுக்கும் சிறிது சிறிது வித்தியாசங்கள் குணங்கள் தன்மைகள் முதலியவைகள் - அதாவது புலன் வித்தியாசங்கள் அறிவு வித்தியாசங்கள் உள்ளது போலவே, மனித ஜீவனும் மற்ற ஆத்மாக்கள் போலவே இருப்பதோடு புலன் அறிவு விஷயத்தில் சற்று கூடுதல் வித்தியாசம், மாறுதல் முதலியவைகள் உடைய ஜந்துவா?

5. உலகத்திலுள்ள மேற்கண்ட ஜந்துக்கள் எல்லாம் வேறு, மனித ஜந்து மாத்திரம் வேறு என்று சொல்லும்படியான வேறுபாட்டை உடைய ஜந்துவா மனிதன்? எப்படியெனில் மேஜை, நாற்காலி, பெஞ்சு, ஊஞ்சல், என்று சொல்லப்படுவதான வஸ்துக்கள், மரம் என்னும் ஒரே மூலப் பொருளாலும், இரும்பு என்னும் ஒரே உப மூலப்பொருளாலும் செய்யப்பட்டிருந்தாலும், தனித்தனி வடிவத்தோற்றத்தினால் தனித்தனிப் பெயரை உடையதாகி இருப்பது போலவே, உலக வஸ்துக்கள் வடிவம், உருவம், சாயல், குணம், நிலை முதலாகிய பேதத்தால், பலவிதப் பெயர்களை உடையதாயிருந்து, பலப்பல காரணங்களால் அதே வஸ்துக்கள் வேறு பல பெயர்களையும் அடைந்தாலும் , முடிவில் அவற்றின் மூலப் பொருள்களின் பெயர் எல்லாவற்றிற்கும் ஒரே (தாது) பெயருடைய வஸ்துவாகவேதான் இருக்கும்.

- பெரியார்

(‘மோட்சம்-நரகம்-மோசடி’... நூலிலிருந்து)