சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்
சொல்லுகின்றாய் என்துணைவன்
சொன்னதையும் செய்ததையும்
{சொல்வதென்றால்...}
முல்லைவிலை என்ன என்றான்.
இல்லைஎன்று நான்சிரித்தேன்
பல்லைஇதோ என்று காட்டிப்
பத்துமுத்தம் வைத்து நின்றான்.
{சொல்வதென்றால்...}
பின்னலைப்பின்னே கரும்பாம்பென்றான் - உடன்
பேதைதுடித்தேன் அணைத்துநின்றான்
கன்னல்என்றான் கனியிதழைக்
காதல்மருந் தென்றுதின்றான்.
{சொல்வதென்றால்...}
நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;
நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
குறைமதியும் இல்லைஎன்றேன்.
குளிர்முகத்தில் முகம்அணைத்தான்.
{சொல்வதென்றால்...}
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- இடஒதுக்கீடு - தொடரும் சதி வலை! எதிர்கொள்ளுமா தமிழகக் கட்சிகள்?
- பெயர் மாற்றமா? பண்பாட்டுப் படையெடுப்பா?
- “பெரியாரிசத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது; எங்கள் பிணங்களின் மீது தான் அது நடக்கும்”
- தமிழ்த் தேசிய அரசியலாளர்கள் வாக்களிக்க மறுப்பது ஏன்?
- இன்றைய தமிழ் புத்தாண்டு
- புராணப் புளுகும் பத்திரிகைப் புளுகும்!
- விடியாபொழுது
- பாவத்துக்கு ஆபத்தில்லை
- தேர்தல் பிரசாரம்
- தப்லீக் ஜமாத்தை விஷப் பார்வையில் பார்த்தவர்கள் கும்பமேளா குறித்து வாய் திறப்பார்களா?
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்
சொல்லும் செயலும்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.