நேர்காணல்: பல்லடம் நாராயணமூர்த்தி, தீபா, திருப்பூர் வேணி

என்னுடைய பெயர் சண்முகவேணி. நான் தாராபுரத்தில் பிறந்து வளர்ந்தேன். நான் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.

குழந்தை வேண்டாம் என்று ஏன் முடிவு செய்தீர்கள்?

shanmugaveni albertகுழந்தை பெறுவது என்பது பெண்ணை அடிமையாக்குவதற்குப் பெரிதும் காரணமாக அமைவதால் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே பேசிக் கொள்ளும்போது எடுத்த முடிவு. அப்படி ஒருவேளை குழந்தை வேண்டும் என்றால் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்துக் கொள்வோம்.

கணவன், மனைவி நமக்காக ஒரு வாரிசு தேவை என்பது பொது நலமா?சுயநலமா? இதை எப்படி உங்கள் வாழ்க்கையில் எடுத்துக் கொள்கிறீர்கள்?

வாரிசு தேவை என்பது மதவாதிகளுக்கு சுயநலமாகவும், இயக்கவாதிகளுக்கு பொதுநலமாகவும் இருக்கும்.(வளர்ப்பு முறையை பொறுத்து) ஒரு வேளை எங்கள் வாழ்க்கையில் குழந்தை இருந்தால் பொது நலத்திற்காக வளர்த்திருப்போம்.

பெண்களின் வாழ்நாளில் ஒரு பிள்ளை பெற்று வளர்க்க எவ்வளவு நாட்கள் செலவிடுகிறார்கள்?

ஒரு தாய் கருவுற்ற நாள் முதல் பிள்ளையைப் பெற்றெடுத்து வளர்த்து பள்ளிக்கு அனுப்பும் வரையில் குறைந்தது 5ஆம் வகுப்பு படிக்கும் வரையிலாவது ஒரு தாயின் கண்முன்னே பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறைந்தது 10 வருடங்கள் செலவிடுகிறார்கள். இந்த 10 வருடங்களில் அந்த பெண்ணின் தனிப்பட்ட வருவாய் முற்றிலும் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அதிகமான துன்பங்கள் ஏற்படுகிறது. உலக நன்மைக்காக எத்தனையோ பெண்கள் திருமணம் செய்யாமலும், பிள்ளை பெறாமலும் வாழ்ந்து இருக்கிறார்கள்.

பெண் குழந்தை பிறப்பதை மகிழ்வாக ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் தான் சமூகம் இருக்கிறது. இந்நிலை மாற என்ன செய்யலாம்?

இந்துமதம் ஏற்படுத்திய பொது புத்தியால் அவைத்து மதத்திலும் ஆண் தான் வாரிசு என்று ஆகிவிட்டது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் இரண்டு குழந்தையுமே வாரிசுதான். ஆனால் இன்றும் நமது சமூக மக்களின் மனநிலையில் இருப்பது என்னதான் இருந்தாலும் ஒரு ஆண் குழந்தை இருப்பது போல் இருக்குமா? என்பதுதான். இந்த மனநிலை மாறவேண்டும் என்றால் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் எப்படி 50 சதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ததோ அதுபோல எல்லாத்துறைகளிலும் சமமாகக் கொடுத்துவிட்டால் பெண் குழந்தையைப் பெறுபவர்களுக்குப் பெரிதும் சுமையாக இருக்காது.

நமது இந்து மதத்தில் சடங்குகள் பெண்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால் ஆண்களுக்கு ஒன்றோ, அல்லது இரண்டோ மட்டும் இருக்கும். ஆகவே பெண் குழந்தைகளுக்குச் செய்யும் செலவுகள் காரணமாகவே பெற்றோர்கள் பெண் குழந்தை பிறந்தால் செலவு என்றும், ஆண் குழந்தை பிறந்தால் வரவு என்றும் நினைக்கிறார்கள். ஆகவே இந்த தேவை இல்லாத சடங்குகளையும், செலவுகளையும் விட்டுவிட்டு இருவரையும் சமமாக படிக்க வைத்து எல்லாத் துறைகளிலும் சமபங்கு கொடுத்துவிட்டால் நமது நாடும் நல்ல முன்னேற்றம் அடையும்.

பாமரப் பெண்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், குழந்தை பிறப்பது கடவுள் தந்த வரம் என்று சொல்கிறார்கள் இது சரியா?

முற்றிலும் தவறு. அறிவியல் உலகில் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு கூநளவ வரயீந Bயலெ வாடகைத் தாய் மூலம் ஊடடிைேபே முறை எல்லாம் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது கடவுள் நம்பிக்கையுள்ள பெண்கள் மூடத்தனத்தில் மூழ்கிக்கிடக்கின்றார்கள். குழந்தை பிறந்த பிறகு முறைப்படி கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பிறகு அதையும் தாண்டி குழந்தை பிறந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். அறிவியல் மனப்பான்மை ஏற்படாததே இந்த மூடநம்பிக்கைக்குக் காரணம்.

அடித்தட்டு மக்கள் அதிகக் குழந்தையைப் பெற்றுக் கொள்வதால் யாருக்கு இலாபம்?

அடித்தட்டு மக்கள் அதிகமாகக் குழந்தைகள் பெறுவதால் குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போய்விடுகிறது. அதனால் சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் ஆக்கப்படுகிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகளின் வாழ்நாள் பெரிய முதலாளிகளுக்குத்தான் இலாபமாக அமைகிறது. அவர்கள் வளர்ந்த பிறகு அரசியல்வாதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை அதிகமாக இருக்க ஒரு நபராக பயன்படுகிறார்கள்.

2015 இறுதியில் பா.ஜ.க.எம்.பி சாக்ஸி மகராஜ் என்பவர் சொன்னர், “நமது நாட்டு இந்துப் பெண்கள் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும்.ஒரு குழந்தை இராணுவத்திற்கும்,ஒரு குழந்தை மதத் துறவறத்திற்கும் தரவேண்டும். இரண்டு குழந்தைகளை குடும்பத்திற்கு வைத்துகொள்ளவும்என்று சொன்னார் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இருக்கும் குழந்தைகள் போதாதா நாட்டிற்கு? பெண்கள் நான்கு குழந்தைகள் பெற்று அவர்கள் கஷ்டப்படவேண்டுமா?இதனால் நாட்டில் மக்கள்தொகைதான் அதிகமாகும். இப்பொழுது உள்ள மதவாதிகள் பெண்களின் மனநிலையை உணராமல் பிள்ளைபெறும் இயந்திரமாகப் பார்க்கிறார்கள்.