உலக அளவில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது கணக்கைத் தொடங்கி விட்டது. ஆனாலும், இந்தியாவில் உள்ள சிறு வணிகர்களின் எதிர்ப்பு, அரசுகளின் தாமதப் போக்கு, போட்டி நிறுவனங்களின் எதிர்ப்பு ஆகியவற்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தையும் கைப்பற்ற இயலாத நிலை இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்ள அனைத்து சிறு சிறு கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் நடக்கும் ஒட்டுமொத்த வியாபாரத் திற்கு இணையாக ஆன்லைன் வர்த்தகமும் பெருகியுள்ளது. ‘அமேசான்’ என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமாக மிகப்பெரும் கொள்ளையை நடத்திவருகிறது.

அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சச்சின் பன்சால், பன்னி பன்சால் என்ற இரண்டு பனியாக்கள் அமேசானில் இருந்து தொழிலைக் கற்றுக்கொண்டு, 2007 இல் அந்நிறுவனத்தில் இருந்து விலகி, ஃப்ளிப்கார்ட் என்ற ஆன்லைன் வணிக நிறுவனத்தைத் தொடங்கினர். மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்ட அந்த பனியாக்களின் நிறுவனம், சில ஆண்டுகளிலேயே உலகப் பெருங் கோடீசுவரர் பில்கேட்ஸ் பங்குதாரராக இணையு மளவுக்கு வளர்ந்தது.

நேரடி சில்லறை வணிகத்தைவிட, ஆன்லைன் வர்த்தகம் சூடுபிடித்துள்ள இன்றைய நிலையில், இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தைக் கைப்பற்றத் துடித்த அமெரிக்காவின் வால்மார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. இப்போட்டியில் தற்போது வால்மார்ட் நிறுவனம் வென்றுள்ளது. 130 கோடி இந்தியர்களைச் சுரண்ட இரண்டு அமெரிக்கர்களிடையே நடந்த போட்டியில் வால்மார்ட் வென்றுள்ளது.

2018 ஆம் ஆண்டு மே இரண்டாவது வாரத்தில் சுமார் 1 இலட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஃப்ளிப்கார்ட்டின் 75 சதவிகிதப் பங்குகளை வால்மார்ட் வாங்கிவிட்டது. இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் சில்லறை வர்த்தகத்தை நம்பி பல இலட்சக்கணக்கான சிறுகுடும்பங்கள் வாழ்கின்றன. தெருத்தெருவுக்குப் பெட்டிக்கடைகளும், அண்ணாச்சி கடைகளுமாக மக்களோடு மக்களாக அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். நமது கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து, அதற்கேற்ப வணிகம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இலட்சக்கணக்கான குடும்பங்களும், அந்த இலட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த நமது அன்றாடத் தேவைகளும், இனி ஒன்று அல்லது இரண்டு மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லப் போகின்றன.  நாம் என்ன சாப்பிட வேண்டும், வீட்டில் எந்தப் பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்பவைகளை இனி அமேசானும், வால்மார்ட்டும் முடிவு செய்யப்போகின்றன.

இந்தக் கொள்ளைகள் சில்லறை வணிகத் தோடு மட்டும் நிற்கப்போவதில்லை. இந்தச் சில்லறை வர்த்தகத்திற்கு விவசாய விளைபொருட்களைக் கொண்டு செல்லப்போகும், சிறு விவசாயிகளின் எதிர்காலத்தையும் சேர்த்து அழிக்கப்போகின்றன. இப்படி கோடிக்கணக்கான, விவசாயிகளையும், சிறு வியாபாரிகளையும், நம்மையும் கொள்ளைஅடிக்கப் போகும் வால்மார்ட் நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் தலைமைச் செயல் அதிகாரி யார் தெரியுமா? க்ரிஷ் அய்யர் என்ற பார்ப்பனர்.

ஆம். அய்யோ பாவம். அய்யர் அப்பாவி, நம்ம ஊர் கோவிலில் தட்டில் நாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார். அந்த அய்யர்கள் மீது ஒரு எப்.ஐ.ஆர். கூட இல்லை என்றெல்லாம் நாமேகூடப் பரிதாபப்பட்டிருப்போம். ஆனால், அந்தப் பரிதாபம்தான் மிகவும் பரிதாபமானது.

ஃப்ளிப்கார்ட் உரிமையாளர்கள் பன்சால் என்ற பனியாக்கள். வால்மார்ட் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனம். இந்த இரண்டு தரப்புக்கும் மீடியேட்டராக இருந்து ஒட்டுமொத்த இந்தியா வையும் கொள்ளை அடிக்கப்போகும் செயல் அதிகாரி க்ரிஷ் அய்யர் ஒரு பார்ப்பனர். இந்தியா விற்கு மட்டுமல்ல; வால்மார்ட் நிறுவனத்தின் அகில உலகத் தலைமைக்கே இந்தப் பார்ப்பனர் தான் துணைத்தலைவர். இந்த வால்மார்ட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள 10,000 பன்னாட்டு நிறுவனங்களில் 8,387 (93 சதவீதம்) நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக இருந்து கொண்டு, நாட்டைச் சூறையாடுபவர்கள் பார்ப்பனர்கள் தான். அதனால் தான் தோழர் பெரியார், இந்திய விடுதலையை “பார்ப்பன - பனியாக்களுக்கு செய்துகொடுக்கப் பட்ட மேட் ஓவர்” என்றார். 

 ஆதாரம் : Economic times,10.05. 2018,  EPW August  2012