இந்து - கிறிஸ்தவச் சடங்குகளை மறுத்து வென்ற விஜி - வின்சென்ட்

ஜாதி, மதம் கடந்து திருமணம் செய்பவர்கள்கூட, மதம் மாறியவர்கள் கூட, திருமணத்திற்குப் பிறகு, மதமாற்றத்திற்குப் பிறகு - தங்கள் ஜாதியின் அடையாளத்தைத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சாதி, மதச் சடங்குகளைக் கைவிடுவதில்லை. இந்து மத மறுப்பு என்பது ஏதோ ஒரு நாள் ஒரு மதமறுப்பு உறுதி மொழி எடுப்பதோமுடிந்து விடுவது அல்ல.

இந்த மதத்தைவிட்வேறு மதத்திற்கே சென்றாலும்கூநம்மை விடாமல் துரத்திக் கொண்வேருவது ஜாதியும், ஜாதிச் சடங்குகளும் ஆகும். அதன் தன்மையை அறிவியல் கண்ணோட்டத்தோஅணுகிய தோழர் பெரியார், இந்து மதத்தின் ஒவ்வொரு பண்பாட்அசைவிற்கும், அதிரடியான எதிர்பண்பாட்டினை வளர்த்தெடுத்தார்.  மதங்களின் வாழ்க்கை முறைகளுக்கு மாற்றாக - அறிவியலை அடிப்படையாகக் கொண்வாழ்க்கைமுறையை முன்வைத்தார்.

அறிவியல் அடிப்படையிலான பெரியாரியல் வாழ்க்கை முறையை முடிந்த அளவு பின்பற்ற முயற்சித்த தோழர்கள் விஜி - வின்சென்ட் இணையர் தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.  திண்டுக்கல் நகரை அடுத்த தாமரைப்பாடி அருகே உள்ள சாலையூரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி.  திண்டுக்கல் மாவட்டம்  செம்பட்டி அருகே உள்ள ஆத்தூரைச் சேர்ந்தவர் வின்சென்ட். இருவரும் ஜாதி, மதம் கடந்து தாலி மறுப்புத் திருமணம் செய்தவர்கள்.

உங்கள் திருமணம் நடந்த முறை பற்றிக் கூறுங்கள்

எனக்கும் வின்சென்ட்டுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யும் போது,. எனக்கு இவரைப்பற்றி எந்த அறிமுகமும் இல்லை.  எனது பெரியம்மா மகன் (அண்ணன்) இவரைப்பற்றிய சில நல்ல பழக்கவழக்கங்களைப்பற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்எடுத்துக் கூறினார். என்னுடய அப்பாவும் இவரைப்பற்றி கூறி சம்மதிக்க வைத்தனர். நானும் இவரைப்பார்க்காமலே திருமணம்செய்ய ஒப்புக்கொண்டேன்.

அண்ணன் ஒரு சில விஷயங்களைச் சொல்லத் தயங்கினார்.  பின்பு ஒரு நாள் அண்ணன் போனில்  சொன்னார். இந்தக் கல்யாணம் வித்தியாசமானது என்றார்.  நான் அப்படியா?  என்று கேட்டேன்.  அவர் சொன்னார், “தாலி கட்டாத கல்யாணம்” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் இந்த மாதிரியான திருமணத்தை நான் பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. எனக்கு ஒருபக்கம் பயம்தான்.  ஆனால் திருமணத்திற்குத் தயாரானேன்.

ஒரு நாள் திருமணத்திற்குப் புதிதாக ஒரு காலணி வாங்கச் சென்றிருந்தேன். அவர் கேட்டார், காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்திருமணமா? என்று கடைக்காரர் கேட்டார். நான் சொன்னேன், இது நிச்சயிக்கப்பட்கல்யாணம். ஆனால் தாலிகட்டாத கல்யாணம் என்றேன். அவர் அப்ப இது  பெரியாரிஸ்ட் கல்யாணம். இவர் தி.க தோழரா? என்று கேட்டார்.

நான் ஆம் என்றேன். அந்தக் கடைக்காரர் ஒரு முஸ்ஸீம் அவர் சொன்னார், “நீங்க வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கப் போறீங்க” (ஒரு முஸ்ஸீம் இப்படி சொல்லுகிறாரே என்று எனக்கு ஆச்சரியம். “எந்த ஒரு சம்பிரதாயத் தொந்தரவுகளின்றி சந்தோஷமாக இருக்கப்போறீங்க” என்றார். பிறகு நான் விடைபெற்று வந்து விட்டேன்.

இந்தத் திருமண முறையில் வேறு என்ன வேறுபாட்டைக் கண்டீர்கள்?

மற்றவர்களைப்போல் வரதட்சனை கேட்கவில்லை. பண்பாத்திரம் எதுவும் கொண்டுவரத் தேவையில்லை என்றார். திருமண நிகழ்வுகள் கூட வித்தியாசமாகத் தான் இருந்தது. முகூர்த்தக்கால் ஊன்றுதல் முதல் ஏனைய எந்த சம்பிரதாய நிகழ்வுகள் இல்லாத (மைக்செட்டு. பாட்டு. பந்தல். மணப்பெண் அழைப்பு. முதலான) திருமணமாக இருந்தது.

தி.வி.க தலைவர் தோழர் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களால் துணையேற்பு உறுதி மொழியினை  ஏற்றுக்கொண்டு, தி.மு.க மாவட்டச் செயலாளர் திரு. ஐ. பெரியசாமி அவர்களால் மலர் மாலை எடுத்துக்கொடுக்க - இருவரும் மாலையை மாற்றிக் கொண்ட தோழர்கள், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்களோசிறப்பாக இவ்விழா நடைபெற்றது.

நீங்கள் தாய்மையுற்ற காலத்தில் பெண்களை சந்தோஷப்படுத்தும் சடங்கான வளைகாப்பு நிகழ்ச்சியை ஏன் தவிர்த்தீர்கள்? அதன் காரணத்தைப் பற்றி சொல்லுங்கள்?

திருமணத்திற்கு முன் பெரியாரியலைப் பற்றியான புரிதல் இல்லை. இயல்பாகவே இம்மாதிரியான சடங்குகளுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுவேன்.

‘வளைகாப்பு’ என்பது ஒரு மூடத்தனமான நிகழ்வு. பொதுவாக தாய்மையடைந்த காலங்களில் பெண்களுக்கும், வளரும் கருவிற்கும் அடிப்பேைதவை; போதுமான அளவு ஊட்டச்சத்துமிக்க  உணவுகள் மற்றும் கருவின் வளர்ச்சியைப் பற்றியான மருத்துவப் பராமரிப்பு மட்டுமே. அதைத் தவிர்த்த வளைகாப்பு என்ற பெயரில் நடக்கும் சம்பிரதாயச் சடங்குகள் தேவையில்லாதவை.

வளைகாப்பு என்பது ஆண்மை மற்றும் பெண்மை என்னும் கற்பிதத்தை வலியுறுத்துவதால் தவிர்த்தோம். மேலும் ‘பூப்படைதல்’ எனும் சடங்கு தாய்மையடையத் தயாராகிவிட்டாள் என்பதைத் தெரியபடுத்த நடத்தப்படுவது போல் ‘வளைகாப்பு’ சடங்கும் அதனோதொடர்புடைய தாய்மை அடைதலை உறுதிபடுத்தவும் நடத்தப்படுகிறது. இருவரும் புரிந்துகொண்இச்சடங்கினைத் தவிர்த்தோம்.

வளைகாப்பு வேண்டாம் என்று நீங்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்ததை உங்கள் வீட்டிலும் உங்கள் கணவருடைய வீட்டிலும் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

இரண்டு குடும்பங்களுடைய மதமும் வேறு வேறாயினும் அவரவர் சாதி சார்ந்த சடங்குகளைக் கடைபிடிப்பதில் தெளிவாகவே இருந்தனர். சடங்குகள் வேண்டாம் என்று முடிவெடுத்த பிறகு எங்களை எங்களுடைய கொள்கை சார்ந்த வாழ்வியலைக் கடைபிடிப்பதில் இடையூறாக இருக்க வேண்டாம் என்று புரிய வைத்தோம்.

வின்சென்ட் வீட்டில் அரைமனதுடன் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.  என்னுடைய வீட்டில் மட்டும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை.  மேலும் வின்சென்ட் தலைப்பிரசவம் தாயார் வீட்டில் நடத்துவதுதான் முறையென்ற முடிவினை மறுத்து, நானே மருத்துவச் செலவுகளை ஏற்று குழந்தைப் பிறப்பினைப் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

உங்களுக்குக் குழந்தைபிறந்தவுடன் நல்ல நேரம், நாள் நட்சத்திரம் பார்த்துப் பெயர் வைத்தீர்களா? அதைப் பற்றி கூறுங்கள்.

விஜிக்கு அறுவைசிகிச்சையின் மூலம்  குழந்தையை எடுத்தனர். பெண் குழந்தை  பிறந்த நேரத்தை செவிலியர் 2:13 பிற்பகல் என்று கூறினார். பிறகு மருத்துவமனையில் 30 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் இல்லையென்றால் பிறப்புப் பதிவேட்டினை நகராட்சிக்கு அனுப்பிவிடுவார்கள்  என்ற தகவலறிந்து பெயரினைத் தேர்வுசெய்தோம்.

இந்த ‘மகிழினி’ என்ற பெயர் என்னுடைய நண்பனின் குழந்தைக்குத் தேர்வு செய்த பெயர். ஆனால், அவர்கள் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை உடையவர் களாதலால் ‘த’ எனத் தொடங்கும் பெயர்தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர்.

அதனால் அக்குழந்தைக்குத் ‘தமிழினி’ என்ற பெயர் தேர்வானது.  அதனால் நாங்கள் முன்பே ‘மகிழினி’ என்ற பெயர் இருப்பில் இருந்ததால்,  இந்தப் பெயரையே வைத்தோம். மேலும் பெயருக்கு முன் இருவருடைய தொடக்க எழுத்துகளும் வர வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆக, ‘வி . வி. மகிழினி’ என்ற பெயர் வைத்து பிறப்புச் சான்றிதழ் வாங்கி வந்து விட்டு, பின்பு தான் இருவருடைய வீட்டிலும் தெரியப்படுத்தினோம்.

குழந்தை பிறப்புத் தொடர்பாக கிறிஸ்தவ மதத்தில் என்னென்ன சடங்குகள் உள்ளன? அவற்றை நடத்தினீர்களா?

குழந்தை பிறந்தவுடன் 30 நாட்களுக்குக் குழந்தையுடன் எங்கும் செல்லக்கூடாது என்றனர். ஆனால் நாங்கள் அதையும் மீறினோம். குழந்தை குப்புற விழுந்து எழுந்திருக்கும் இடத்தில் குறித்து வைத்துச் சாமி கும்பிடும் பழக்கவழக்கம் சில சமுதாயங்களில் செய்வார்களாம். அதனையும் நாங்கள் செய்யவில்லை. கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைக்கு முதல் மொட்ேைவளாங்கண்ணி கோவிலிலோ அல்லது அவர்கள் வரம்வேண்டி எந்தக் கோவிலில் பிரார்த்தனை செய்தார்களோ அங்கே தான் நிறைவேற்றுவார்கள் இந்துக்கள் குலதெய்வகோவிலில் நிறைவேற்றுவார்கள்.

கிறிஸ்தவர்கள் மதத்தில் பெயர் வைப்பதற்கு ‘ஞானஸ்தானம்’ என்று பெயர். கோவிலில் ஞானம் பெற்றோர்கள் முன்னிலையில் அந்தச்சடங்கானது நடக்கும். ஆனால் நாங்கள் பெயரினை முன்னரே வைத்துவிட்டோம்.

குழந்தை பிறந்தவுடன் 7 - 9 நாட்களில் தொட்டில்கட்டி அதில் படுக்க வைப்பார்கள். அப்போது தொட்டில் சீர் செய்வார்கள் அதுபோல் எதுவும் செய்தீர்களா? குழந்தைக்குக் குலதெய்வ கோவில்களில் தாய் மாமன் மடியில் வைத்து மொட்டைஅடித்தல். காதுகுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினீர்களா?

தொட்டில் சீர் எதுவும் செய்யவில்லை. முதல் மொட்குைறிப்பிட்காலத்திற்குள் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.  நாங்கள் மகிழினியின் முதல் பிறந்தநாளை எளிமையான முறையில் வீட்டிலேயே சிறப்பித்து விட்அதற்கு அடுத்தமாதம் மார்ச் 8 ஆம் தேதி மொட்எைடுக்கலாம் என்று முடிவுசெய்தோம். மகிழினிக்கு முடி அதிகமாக வளர்ந்திருந்ததினால் தான் இந்த முடிவை எடுத்தோம்.  

உடனே முடிதிருத்தம் செய்பவரை அழைத்து வீட்டின் நடுப்பகுதியில் அமர்ந்து நான் என் மடியில் அமரவைத்து பிடித்துக்கொள்ள மொட்டையெடுத்து முடித்தோம்.  அன்றே காது குத்தும் நண்பரை அழைத்து வந்து காதணியையும் மாட்டிவிட்டோம். இது துணைவியாரின் வீட்டிற்கு தெரியாது.

இரண்டொரு நாள் கழித்து  அவர்கள் வீட்டிற்கு  விடுமுறைக்கு அழைத்துச் சென்றபோது தான் இப்படி சொல்லாமல் மொட்எைடுத்திருக்கீங்களே என்று கூறி கோபித்துக் கொண்டார்கள். பிறகு பெரிய எதிர்ப்பு ஒன்றுமில்லை.  துணைவியார் வீட்டில் அவர்களின் அப்பா சாஸ்திரம் சம்பிரதாயத்தில் மிகத்தீவிரமாக கடைபிடிப்பவர் ஆதலால் கொஞ்சம் எதிர்ப்பும் இருந்தது.

அதில்கூட நாங்கள் சிலவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் எங்களுக்கு அவை பற்றிய போதுமான புரிதல் இல்லை. அதாவது, என்னதான் நாம் ஜாதியே வேண்டாம் என்றாலும், மொட்டை அடிப்பது, காதுகுத்துவது போன்ற விழாக்களின் மூலம் நம்மையும் ஜாதிக்குள் இழுத்துவிடுகிறது இந்தச் சமுதாயம். என் ஜாதியைச் சேர்ந்த தாய்மாமன் மடியில் உட்கார வைப்பதால் என் ஜாதி உறவு நிலைக்கிறது. மொட்அைடிக்கும் ஜாதியைச் சேர்ந்தவரை வைத்து மொட்டை அடிப்பதால், அந்த ஜாதியும் - காதுகுத்தும் ஜாதியைச் சேர்ந்த ஒருவரை வைத்து காது குத்துவதால் அந்த ஜாதியும் அவரவர்கள் மீது திணிக்கப்படுகிறது.

இப்படி என் ஜாதியை நான் பின்பற்றச் செய்கிறது இந்தப் பண்பாடு. மேலம் காது குத்துபவர்களும், முடிதிருத்துபவர்களும் அவரவர் ஜாதிகளையும் தவறாமல் பின்பற்றச் செய்கிறது இந்தப் பண்பாடு. நமது தோழர்கள் பலர் இவ்வாறு தாய்மாமன் மடியில் அல்லாமல், சலூன் கடைகளில் சென்று முதல் மொட்டை அடிக்கிறார்கள். அதைக்கூடத் தவிர்க்க வேண்டும்.

சலூன் கடைகளில் முதல் மொட்மைட்டுமல்ல; வழக்கமாக மாதம் ஒருமுறை முடிவெட்டுதல், வாரம் ஒருமுறை சேவிங் செய்தல் போன்றவையும் தான் நடக்கின்றன? அப்படியானால் அவையும் ஜாதியைத் திணிப்பவை தானா?

நிச்சயமாக, நீங்கள் கூறுவதுதான் உண்மை. வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து கடும் உழைப்புகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களைப் பாருங்கள். அவர்களே ஒருவருக்கொருவர் முடிவெட்டிக் கொள்வார்கள். அதைப் போல நாமும் பழகிக்கொள்ள வேண்டும். சேவிங் செய்வதைக் கூட நாமே செய்து பழகிக்கொள்ள வேண்டும். கடையில் தான் செய்ய வேண்டும் என்றால், பணம் அதிகமானாலும் பரவாயில்லை, முடிவெட்டுவதற்கு என்றே உள்ள ஜாதியினரைத் தவிர மற்ற ஜாதியினர் பணியாற்றும் பெரிய கடைகளில் சென்று முடிவெட்டிக் கொள்ள வேண்டும்.

‘தாய்மாமன்சீர்’ என்பது உறவுகள் நீடித்து இருப்பதற்குதானே செய்கிறார்கள் அதை ஏன் தவிர்த்தீர்கள்?

பொதுவாக, குழந்தை பிறந்தவுடன் மொட்அைடித்தல், காதணிவிழா, பூப்படைதல் பின்பு திருமணம் வரையிலான நிகிழ்வுகள் வீண் செலவினையும் செலவு செய்வதற்கு மேல் வரவினை எதிர்பார்ப்பதும் ஒரு காரணமாகும்.

நாங்கள் இதையெல்லாம் தவிர்த்த காரணத்தினால் எங்களிடமிருந்து சில காலம் விலகிய நண்பர்களும் உறவினர்களும் உண்டு.  நாங்கள் தாய்மாமன் சீர் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தோம்.

நம்மால் பொருளாதாரச் சிக்கல்களில் இருக்கும் பொழுது  நண்பர்களிடமும் உறவினர்களிடமும் உதவியைப் பெற்றுக்கொள்வதென்பது வேறு. ஆனால் எங்கள் வீட்டில் இன்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து இவ்வளவு சீர் செய்ய வேண்டும் என்பதில் உடன்பாஇல்லை. முக்கியமாக, இவையெல்லாம் ஜாதியையும் மதத்தையும் இறுகப்பற்றிக்கொண்டு, நாம் அவற்றை விடாமல் கடைபிடிக்கச்செய்யும் சூழ்ச்சியான நடவடிக்கைகள் என்று தான் பார்க்கிறோம்.

ஆனால், நாம் (பெரியரிஸ்டுகள்) ஒவ்வொரு பழக்க வழக்கங்களுக்கும் மாற்றாக முடிவெடுக்கும் பொழுது எளிதில் செய்துவிமுடிவதில்லை.  நாம் கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம் என்று தெரிந்தும் நம்மை நாமாக, சுயமாக வாழ்க்கையை நடத்த சமுதாயம் விடுவதில்லை. இடைமறித்துதான் நிற்கிறது.  இந்தச் சாதி சமூகமும் உறவினர்களும் முடிந்த வரையில் தொல்லை கொடுப்பதில்தான் கவனமாக இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கை முறையை நம் மீது திணிப்பதில் இந்தச் சமூகத்திற்கு ஒரு குரூரமான ஆனந்தம். அதைப் பெரியார் தொண்டர்கள் நாள் தோறும் சந்தித்துக்கொண்இேருப்பார்கள். நாங்களும் சமுதாய எதிர்ப்புகளைச் சந்திக்கிறோம். பெரியாரியலின் துணையோஎதிர்த்து நின்று எங்கள் வாழ்க்கையை - நாங்களே திட்டமிட்வாழ்கிறோம்.