ஜூலை 17 உலக நீதி தினம். இந்த நீதி தினத்தில் நான் உங்களுடன் சில விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் 1945 ல் நெதர்லாந்து தலைநகரம் ஹேக்கிலில் துவங்கப்பட்டு 1946 ல் நடைமுறைக்கு வந்தது இந்த உலக சர்வதேச நீதி மன்றம். இந்த அனைத்து உலக நீதி மன்றம் என்ன தான் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் வந்தாலும் அது வளர்ந்த நாடுகளின் கைஆள் தான் என்பது அவர்களின் கண்டுக்கொள்ளாத தன்மையின் மூலமாக தெரிந்துக்கொள்வோம். அதை சில எடுத்துக்காட்டுடன் விளக்குகிறேன்.

1. உலக நாடுகளின் வெளியுறவுக்கொள்கை என்ன சொல்கிறது என்றால். எந்த ஒரு நாடும் அவர்கள் போர் தொடுக்கும் நாட்டின் அனுமதியின்றி அவர்கள் ரானுவத்தை ஒரு நாட்டிற்குள் இறக்கக் கூடாது. ஆனால் ஒசாமா பின்லேடன் விவகாரத்தை உற்றுப் பார்க்கவும்.

ஒசாமா பின்லேடன் இருந்தது பாகிஸ்தானில் ஆனால் பாகிஸ்தான் அனுமதி இன்றி அமெரிக்க ரானுவம் பாகிஸ்தான் நாட்டில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது சட்டப் படி தவறு. இதற்கு சர்வதேச நீதி மன்றம்  ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்க வில்லை.

2. ஒரு நாட்டின் சார்வதேச கடல் எல்லையில் மற்றொரு நாடு மீன் பிடிப்பது தவறு என EEZ என்ற ஒரு ஒப்பந்தம் சொல்கிறது. ஆனால் அமெரிக்கவின் ஒரு கப்பல் நீலப்புரட்சி என்ற பெயரில் உலக நாடுகளின் சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடித்துத்தான் வருகிறது ஆனால் இதையும் சர்வதேச நீதி மன்றம் கண்டு கொள்ள வில்லை.

3. இங்கிலாந்தின் ஷெல் என்ற ஒரு எண்ணை கம்பெனி நைஜீரியா என்ற நாட்டையே சின்னாபின்ன மாக்கியது. இதை எதிர்த்துக் கேட்ட கென் சாரோ விவா கொல்லப் பட்டார். இது போன்ற அடாவடி செயல்பாடு களையும் சர்வதேச நீதி மன்றம் தட்டிக் கேட்கவில்லை.

4. இந்தியா போன்ற மித வெப்ப நாடுகளில் வளரும் வேப்பஇலை மற்றும் மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கி நமது நாட்டின் வர்த்தக உரிமையோடு சண்டை போட்டது அமெரிக்கா. இதையும் கண்டுகொள்ள வில்லை சர்வதேச நீதி மன்றம்.

5. சதாம் உசேன் ஒரு நாட்டின் தலைவர் அவர் அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்ட காரனத்திற்காக சதாம் எதோ ஒரு நாட்டின் நீதி மன்றத்தில் விசாரனை நடத்தி கொல்லப்பட்டார். இது போன்று பல வல்லரசு நாடுகளின் அடாவடிச் செயல்பாடுகளை கண்டு கொள்ளாத இந்த சர்வதேச நீதி மன்றம் ஜூலை 17ல் உலக நீதி தினம் கொண்டாடுகிறது. இது போன்று இன்னும் சொல்ல பல விசயம் உள்ளது குறிப்பாக சிரியா விவகாரம், கடாபி கொலை, மொபாரக் கொலை, சே குவேராவின் இறப்பு, கார்பன் ஒப்பந்தம் என பல விசயங்களில் உலக வல்லரசுகளின் அடாவடி தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதை எதையும் தட்டி கேட்காத சர்வதேச நீதி மன்றம் கொண்டாடும் உலக நீதி தினத்தை வரவேற்ப்போம்.  நீதி வெல்லட்டும்.