தேவையான பொருட்கள்:

கோழி – 1/2 கிலோ (தோல் நீக்கியது)
சின்ன வெங்காயம் – 1 கப் (நீளமாக நறுக்கியது அல்லது இடித்தது)
மல்லி – 2 தேக்கரண்டி
அரிசி – 1 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
மிளகு – 10 துண்டுகள்
வத்தல் - 10 -15
அரைத்த தேங்காய் விழுது - 1/2 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலை - 10
வெங்காயத்தாள் ‍ 1 தண்டு (optional)
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நல்லெணய் – 3 தேக்கரண்டி
உப்பு ‍ தேவையான அளவு

அரைக்க வேண்டியவை:

மல்லி – 2 தேக்கரண்டி
அரிசி – 1 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
மிளகு – 10
வத்தல் - 10 -15
கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:

• கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரிசி, மல்லி, சீரகம், கறிவேப்பிலை, வத்தல் முதலியவற்றை சேர்த்து வதக்கவும் (குறிப்பு – மிதமான சூடில் வதக்கவும்)

• ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.

• குக்கரில் சுத்தம் செய்த கோழி (சிறிய துண்டுகளாக நறுக்கியது) , அரைத்த மசாலா, சின்ன வெங்காயம், இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறவும். அத்துடன் உப்பு சேர்த்து வதக்கவும். விசில் போட்டு குக்கரை முடி வைக்கவும்.

• இரண்டு விசில் வந்த பின்பு அரைத்த தேங்காய் பாலை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். சூடாக‌ சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.

Pin It