தேவையானவை:

இறால்.................. 1/2 கிலோ
சின்ன வெங்காயம்..100 கிராம்
பெல்லாரி....................1
பச்சை மிளகாய்............4
இஞ்சி...........................1/2 இன்ச் நீளம்
பூண்டு..........................10 பல்
மிளகு........................ 1 தேக்கரண்டி
சீரகம் ...........................1 தேக்கரண்டி
சோம்பு..........................1/2 தேக்கரண்டி
கசகசா...........................1/2 தேக்கரண்டி
எலுமிச்சை................... 1 மூடி
தயிர்.................................1 தேக்கரண்டி
மல்லி தூள்..தேவையானால்.....1தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி+ புதினா.. 1 கைப்பிடி
உப்பு............................ தேவையான அளவு
எண்ணெய்..................4 தேக்கரண்டி

செய்முறை:

இறாலைத் தோல் நீக்கி, குடல் எடுத்து சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும். பெல்லாரியை நறுக்கி கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். சின்ன வெங்காயத்தை உரித்து, அத்துடன் புதினா, மல்லி+ கறிவேப்பிலை போட்டு நன்கு அரைக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும். மிளகு, சீரகம், சோம்பு + கசகசாவை வறுத்து அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெல்லாரி + மிளகாய் போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும். பின் அரைத்த குறு மிளகு சீரகம் மசாலா போட்டு நன்கு வதக்கவும். குறுமிளகு நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே மல்லி தூள் போட்டு வதக்கவும். பின்னர் எலுமிச்சை சாரு + தயிர் + உப்பு போட்டு வதக்கவும். பிறகு, இறாலைப் போட்டு நன்கு வதக்கவும். இப்படியே இதனைக் கொஞ்ச நேரம் சிறுதீயில் வைத்திருந்து நன்கு வதக்கவும்.

குழம்பு வேண்டும் என்றால் இதில் ஒரு டம்ளர் நீர் ஊற்றவும். இல்லை எனில் விட்டு விடலாம். இப்படியே வதக்கிய பின், ஒரு 10 -15 நிமிடத்தில் இறக்கி சாப்பிடலாம். இதனை இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.  சாதத்தில் போட்டும் பிசைந்து உண்ணலாம். சுவை கலக்கலாக இருக்கும்.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It