உலக போலியோ ஒழிப்பு முயற்சி (GPEI) இயக்கத்தின் பகுதியாக 1995ல் இந்தியாவில் போலியா ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. அப்போது கி.பி. 2000க்குள் போலியோ ஒழிக்கப்பட்டுவிடும் என உறுதியளிக்கப்பட்டது. பின்னர் இக்காலத்துக்கு 2007 வரை நீட்டிக்கப்பட்டது. 2007 கடந்தப்பின்னும் போலியோ ஒழிந்தபாடில்லை. போலியோ சொட்டு மருந்தால் பயனேதும் இல்லை, இந்த இயக்கம் வீணானது என புகழ் பெற்ற புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (CSMCN) பேராசிரியர்கள், இந்தியன் மெடிக்கல் அசோசியேசனின் தடுப்பு மருந்து உபபிரிவின் துணைத்தலைவர் ஜேக்கப் புலியேல் (ஆதாரம் Tehelha – Jan 28, 2007) நேஷனல் நாலேட்ஜ் கமிஷன் முன்னாள் துணைத்தலைவர் Dr. புஷ்பா, M. பார்கவா போன்ற ஏராளமான அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். போலியோ சொட்டு மருந்து வீணானது மட்டுமல்ல. விரும்பத்தகாத எதிர்விளைவு நோய்களையும் மரணத்தையும் கூட விளைவிக்க கூடியது என அவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்தை எதிர்த்து ‘பல்ஸ் போலியோ விருத்த சமிதி’ என்றொரு இயக்கமே செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் கடந்த 2008 டிசம்பர் 21 ம் நாளன்று நடைபெற்ற முகாம்களில் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த 6 குழந்தைகள் மரணமெய்தியதாகவும் ஏராளமானனோர் வாந்தி மயக்கத்துக்கு ஆளானதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து தமிழக எதிர்கட்சித் தலைவரின் அறிக்கை 24.12.2008 நாளேடுகளில் வெளிவந்துள்ளன.

பாராளுமன்ற ஜனநாயக சமுதாயத்தில் எதிர்கட்சித் தலைவர் மற்றும் பத்திரிக்கைகளின் குரல் மிகுந்த முக்கியத்துவமுடையவை. முதலமைச்சரும் தமிழறிஞருமான டாக்டர். கலைஞர் அவர்கள்,

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பார் இல்லானும் கெடின்

எனும் குறளின் பொருளறியாதவரல்ல. எனினும் ஏனோ மக்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறைக்கான நடுவண் அமைச்சர் ஆகியோரின் அறிக்கைகள் அமையவில்லை. தமிழக பொது சுகாதராத்துறை இயக்குநர் டாக்ர் எஸ். இளங்கோ அவர்கள் பெயரால் 28.12.2008 தினத்தந்தி நாளேட்டில் வெளிவந்துள்ள அறிக்கை அபத்தத்திலும் அபத்தம். அவரது அறிக்கையில் உள்ளவை.

“ஒவ்வொரு குழந்தையின் குடல் பகுதியிலும் போலியோ நோயை வரவழைக்கக்கூடிய போலியோ வைரஸ்கள் 3 உள்ளன. குழந்தைகள் மலம் கழிக்கும்போது வெளியேறி ஈ உள்ளிட்டவை மூலம் நமது உடலில் உள்ளே போகும்போது போலியோ ஏற்பட்டு உடல் ஊனமாகிறது. இதைத் தடுக்க பிறந்த 2 வாரத்துக்குள் முதல் முறையும் 45, 75, 105 நாட்களில் அடுத்தடுத்தும் சொட்டு மருந்து போட வேண்டும். மருந்து 2 சொட்டு கொடுக்க வேண்டும், அதைவிட அதிகமாகக் கொடுத்தாலும் பாதகமில்லை. இந்த மருந்து போலியோ வைரஸ்களை உயிருடன் வெளியேற்றுகிறது. அந்த வைரஸ் வெளியே வந்ததும் இறந்துவிடுகிறது.

போலியோ மருந்து போடுவதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. சொட்டு மருந்து கொடுக்கும்போது குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், காய்ச்சல், சளி உட்பட, எந்த நோயிருந்தாலும் போலியோ சொட்டு மருந்தை கொடுக்கலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது. சமீபத்தில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட அன்று இறந்த குழந்தைகள் பற்றி விசாரணை நடத்தியதில் எந்த குழந்தையும் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டதால் இறக்கவில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் இறந்த 3 மாத குழந்தைக்கு இருதயநோய் இருந்துள்ளது. அதனால் மூச்சுத் திணறி இறந்துள்ளது.

ஈரோட்டில் 4 மாத குழந்தை இறந்துள்ளது. இது பிறந்தபோதே தலையில் நீர்கோர்த்த நிலையில் பிறந்துள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்துள்ளது. அதன் காரணமாக இறந்துள்ளது. கரூரில் இறந்த குழந்தைக்கு வயது 5 மாதம் அடிக்கடி வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு முறையாக சிகிச்சை அளிக்கப்படாததால் இறந்துள்ளது.” இயக்குநர் சொன்னதன் சாராம்சம் இது தான். மருத்துவம் அறிந்தோர் பார்வையில் நகைப்பிற்கிடமாகும் இந்த அறிக்கையின் உணவைத் தன்மை என்னவென்று இனிப் பார்க்கலாம்.

இயக்குநர் அறிக்கைப்படி சராசரியாக 5 வயதுக்குட்பட்ட குழந்தை ஒன்று பத்து டோஸ் தடுப்பு மருந்தை குறைந்த பட்சமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு டோஸ் என்பது இரண்டு சொட்டைவிட மிகுந்திருந்தாலும் பாதகமில்லை என்பதாகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகிறது. போலியோ சொட்டு மருந்து என்பது உயிருள்ள வைரஸ் கிருமியான நஞ்சு, அது அளவுக்கு மிஞ்சினால் உடனடி மரணம் மற்றும் ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய VAPP (Vaccine associated Paralytic poliomyelitis) மற்றும் VDPV (Vaccine - derived polioviruses) போன்றவற்றைப் பற்றி இயக்குநருக்கு யாரும் சொன்னது இல்லை போலும்.

எல்லாக் குழந்தைகளின் வயிற்றிலும் போலியோ கிருமிகள் இருப்பதாகச் சொல்லும் (அது உண்மையல்ல) இயக்குநர் அது மூலம் மலம் வெளிவந்தவுடன் மரணமடையாமல், குழந்தைகள் உடலுக்குள் சென்று போலியோ மருந்தால் உயிருடன் வெளியேறி பின் மரணமடைவதேன்? இயக்குநர் தான் விளக்க வேண்டும்.

நமது இயக்குநர் சொல்கிறார் எந்த நோய் இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து போடலாம் என்று. ஆனால் இவர்கள் பயன்படுத்தும் போலியோ சொட்டு மருந்தை தயாரிக்கும் Bharat Biotech International Ltd தனது வெளியீட்டில்.

Contraindications

Administration of BIOPOLIO should be delayed in children suffering from acute febrile illnesses, diarrhoea and dysentery, debilitating ailment, abdominal pain and in patients undergoing steroid therapy. However, if in doubt for instance during diarrhoea a repeat dose can be given after recovery, Vaccination should be avoided in patients with leukaemia, lymphoma, malignancy and dysgammaglobulinemias. Human Immune Deficiency Virus (HIV) infected infants :HIV infected infants both asymptomatic and symptomatic, should be immunized with OPV according to standard schedules.

என்கிறது. இதில் எதைப் பின்பற்றுவது சரி என இயக்குநர் விளக்க வேண்டும். சமீபத்தில் சொட்டு மருந்து போட்ட குழந்தைகள் யாரும் இறக்கவில்லை என்கிறார். பின்னர் இறந்ததற்கு போலியோ சொட்டு மருந்து காரணமில்லை என்கிறார். விசாரணை நடத்தியதில் எந்த குழந்தையும் இறக்கவில்லை என நிரூபிக்கப்பட்டதாகச் சொல்கிறார். யார் யார் விசாரணையில் ஈடுபட்டுள்ளது? என்னென்ன தெரிய வந்தது? அறிக்கை எந்தெந்த ஏடுகளில் வெளிவந்தது முழு விவரங்களை இயக்குநர் வெளியிடத் தயாரா?

“போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர சொட்டு மருந்து முயற்சி களுக்குப் பின்வரும், அரசு ஆவணங்களை உற்று நோக்குகையில் இச்சொட்டு மருந்தால் பெருமளவு பலன் ஏதும் இல்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.” இது ‘சர்பின்’ முதன் முதலில் போலியோ சொட்டு மருந்து உருவாக்கியவரின் வெளிப்படையான அறிவிப்பு. உண்மையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அரசியல் தந்திரத்தைத்தான் ஓர் அரசு அதிகாரி என்ற நிர்பந்தம் காரணமாக இயக்குநர் மேற்கொள்ள வேண்டி வந்துள்ளது.

500க்கும் மேற்பட்ட வாத நோய்களில் ஒன்று மட்டுமே போலியோ. அரசாலும் ஊடகங்களாலும் பெரியதாக ஊதிப் பெருக்கும் அளவுக்கு பெரும் பாதிப்பைக் கொண்டதல்ல அது. இப்போது கூட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எகிப்து, நைகர், நைசீரியா மற்றும் இந்தியா ஆகிய ஆறு நாடுகள் தவிர உலகில் வேறெந்த நாட்டிலும் போலியோ இயக்கம் இல்லை. மற்ற நாட்டு குழந்தைகள் எல்லாம் நொண்டியாகவா அலைகிறார்கள்?

போலியோ நோயை விட போலியோ சொட்டு மருந்து 40, 50 ஆண்டுகள் அளவுக்கு நீண்ட பாதிப்பை தரவல்லது என பெரும்பாலான அறிஞர்கள் கருத்துக் கொண்டுள்ளனர். இதனை போன்ற சர்வதேச அமைப்புகளே ஒப்புக் கொண்டுள்ளது. போலியோ தடுப்பு மருந்தானது குரங்குகளின் சிறுநீரகங்களில் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் நோய் தடுப்பு மருந்தாக உருவாக்கப்பட்டது. அக்குரங்குகளின் சிறுநீரகங்கள் கிமியன் வைரஸ் எனும் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது மறைக்கப்பட்டுள்ளது. சிமியன் வைரஸ் 40 (sv 40) பல வருடங்கள் கழித்து மூளை, ஈரல், நுரையீரல், எலும்பு ஆகிய இடங்களில் புற்று நோயை ஏற்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

பின் ஏன் தான் மத்திய மாநில அரசுகள் இவ்வளவு முனைப்பாக இந்த சொட்டு மருந்து இயக்கத்தை ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட பிறகு போலியோ நோய் கட்டுப்படுவதற்கு மாறாக அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் நிரூபித்த பின்னும் அரசாங்கங்கள் தொடர்ந்து முனைப்பு காட்டுவது ஏன்? இந்திய குழந்தை மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் தடுப்பு மருந்து துணைக்குழு போன்றவை போலியோ சொட்டு மருந்துகளின் பலன் குறித்து, ஐயங்கள் எழுப்பிய பின்னும் அரசாங்கங்கள் அதனைப் பரிசீலிக்காதது ஏன்? .... ஏன்? ..... ஏன்?... இந்த எல்லா ‘ஏன்’ களுக்கும் அரசாங்கங்களில் பல பொறுப்பு வகித்த மனசாட்சி உள்ள மருத்துவரான தேசிய அறிவு ஆணைய முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் புஷ்பா எம். பார்கவா, கல்பாக்கம் அணுமின் நிலைய கதிர்வீச்சின் காரணமான மருத்துவ நலப்பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் டாக்டர் புகழேந்தி, ஐ.எம்.ஏ.யின் போலியோ தடுப்பு கமிட்டி இணைத்தலைவர் ஜாக்கப் ஜான் போன்றோர் விடையளிக்கின்றனர்.

அது என்னவெனில், முன்னேறிய உலக நாடுகளால் காலவதியானதென கைவிடப்பட்ட தொழில் நுட்பங்களையும் உற்பத்திக் கருவிகளையும் பொருள்களையும் இந்தியா போன்ற ஏமாளி மூன்றாம் உலக நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களையும் ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு அப்பாவி மக்களின் தலையில் கடனுதவி என்ற பெயரால் கட்டி விட்டு லாபமடைவதோடு அந்த மக்களையும் பாதுகாக்க வந்த அவதார புருசர்களாக தங்களை தாங்களே அறிவித்துக் கொள்வது என்பது தான்.

போலியோ தடுப்பு மருந்தால் வரும் போலியோவை Associated Paralytic Polic (VAPP) என அழைப்பர். இந்தியாவிலும் பல வருடங்களுக்கு முன்னரே போலியோ தடுப்பு மருந்தின் காரணமாக போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. (Basu SN : Journal of Indian Medical Association 1986, Bhagwat SMetal - Indian, Journal of Medical Science 1966.) இந்தியாவில் தற்சமயம் இயற்கையான போலியோவைக் காட்டிலும், தடுப்பு மருந்து காரணமாக வரும் போலியோ அதிகம் என பல இந்திய மருத்துவ அறிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். உ.ம். Dr.Jacob John (இவர் இத்துறையில் மிகச் சிறந்த வல்லுநர்)

போலியோ தடுப்பு மருந்து இயக்கமானது இந்தியக் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது உள்ள அக்கரையினால் செயல்படுத்தப்படும் ஒரு இயக்கமல்ல. என்பதனை வரும் பிப்ரவரி முதலாம் நாள் நடைபெறப் போகிற இந்த தவணையின் இரண்டாவது இயக்கம் நிரூபிக்கப் போகிறது. எப்படியெனில் காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் முன்னும் பின்னுமாய் வர வெள்ளுடை செவலியர்களும் மருத்துவர்களும் ஆங்காங்கே சலவைச் சட்டையணிந்த சட்டமன்ற உறுப்பினர்களும் மந்திரி மார்களும் பிள்ளைகளின் வாயில் பிடிவாதமாய்த் திறந்து சொடடு மருந்துகளை திணிக்கப் போகிறார்கள். பிறகு சொட்டு மருந்து இயக்கம் வெற்றி பெற்றதென அரசாங்கம் அறிவித்துக் கொண்டு மகிழக் கூடும்.

சொர்க்கத்துக்கே சென்றாலும் தடியாலடித்து அழைத்துச் செல்ல முடியாதென அறிஞர் பெருந்தகை விளாதிமீர் இலியீச் லெனின் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நரகத்துக்கு மட்டுமே அடித்து அழைத்துச் செல்ல முடியும். சொல்லிப் புரிய வைத்து விளங்கி ஏற்றுக் கொண்ட நிலையில் அன்பின் பெயரால் மட்டுமே சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல இயலும். வரவிருக்கிற போலியோ சொட்டு மருந்து இயக்கத்தை நரகத்துக்கான அழைப்பா சொர்க்கத்துக்கான வென்றெடுத்தலா - அரசு என்ன செய்யப் போகிறதென. அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

பிள்ளைகள் மீது பாசம் கொண்ட பெற்றோரும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சான்றோரும், மனசாட்சியுள்ள மருத்துவர்களும், சமூக மாற்றத்திற்குக் குரல் கொடுக்கும் சமூக அமைப்புகளும், அரசியல்கட்சிகளும் மத்திய-மாநில அரசுளை வலியுறுத்துவோம் - “திறந்த பொது விவாதம் தேவை” என்று! 

(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)

Pin It