வெற்றிலைப் பாக்கு, பான் பராக் உள்ளிட்ட புகையிலையுடன் கூடிய பாக்கு கலப்பு களை சதா மென்றுக் கொண்டிருப்பவர்களுக்கு வாய் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகும்.

சுயிங்கத்தில் ஆரம்பித்து நாள் முழுவதும் மெல்லும் இப்பழக்கம் உள்ளவர்கள், பின்னாளில்பான் பிராக் போன்ற புகையிலை கலந்த பாக்கை மெல்ல தொடங்குகின்றனர். இவைகளை மெல்லும் போது சுரக்கும் உமிழ்நீருடன் கலக்கும் பாக்குச் சாறு, வாய்க்குள் உள்ள கன்ன உள் சுவர்களை பாதிக்கிறது. வாய் உள் சுவர்களில் உள்ள தசை நார்கள் நாளடைவில் இறுகத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் அவை மிக இறுக்கமாக ஆகிவிடும் போது, வாயை அசைக்க முற்படும்போது சதை நார்கள் ஒத்துழைக்காது. மாறாக, அவை கடினப்பட்டு, வாயில் இருந்து எச்சில் சுரந்து வெளியே வழியும்போது கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகிறது.

இப்படிப்பட்ட கடினப்பட்ட வாய் உள் தசை நார்களில் புற்று நோய் உருவாகிறது. அது மிகக் குறுகிய காலத்தில் வாய் புற்று நோயாக ஆகி, பேச்சுக்கும் பிறகு உயிருக்கும் உலை வைத்து விடுகிறது. இந்த வாய் புற்று நோயை ஆங்கிலத்தில் ஓரல் சப்மியூக்கஸ் ஃபைரோசி (Oral Sub mucous fibrosis - OSF) என்று கூறுகின்றனர்.

வெற்றிலை பாக்கு போடுவோரில் நாள் முழுவதும் அதனை குதப்பிக் கொண்டிருப்பவர் களைத் தவிர, அது பெரிதாக யாரையும் பாதிப்ப தில்லை. ஆனால், பான் பாரக் போன்ற புகையிலை யுடன் கலந்த பாக்கை குதப்புபவர்களுக்கு நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒன்றரை இலட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுகின் றனர். இவர்களில் 50 விழுக் காட்டினருக்கு வாய் புற்று நோய் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இது 2004 ஆம் ஆண்டுக் கணக்கு, இப்போது இரண்டு மடங் காகியிருக்கலாம்.

2004 ஆம் ஆண்டில் இது தொடர் பாக நடத்தப்பட்ட ஆய்வில், சில மரபணுக் கூறுகள் கொண்டவர்களை இந்த நோய் மிக வேகமாகப் பாதிக் கிறது என்று கண்டுபிடித்துள் ளார்கள். எச்.ஓ-1 என்ற அந்த மரபணுக் கூறு கொண்டவர்களில் 147 பேரை சோதித்துப் பார்த்ததில், 71 பேருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. எவ்வாறு இதய நோய் அல்லது நுரையீரல் நோய்கள் குறிப்பிட்ட சில மரபணுக் கூறுகளைக் கொண்டவர் களை அதிகமாகப் பாதிக்கிறதோ, அதேபோல், இதற்கும் மரபணுக் கூறுகள் உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

மரபணுக் கூறு எதுவாக இருப்பினும், வாய் புற்று நோய்க்கு வித்திடும் பாக்கு போடும் பழக்கத் தை தவிர்ப்பது நல்லது. “பாக்கை மெல்வானேன், இப்படி நோய் பற்றிச் சாவானேன்”.குழந்தைகளுக்கு சுயிகம் கொடுப்பது, அதனை பொழுதிற்கும் அவர்கள் குதப்பிக் கொண்டிருக்க அனுமதிப்பது போன்ற பழக்கங் களை பெற்றோர்கள் முற்றிலுமாக தவிர்த்திடல் வேண்டும்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

Pin It