கடந்த 06-03-2018 சென்னையில் நாம் திட்டமிட்டபடி, இராமராஜ்ஜிய இரத யாத்திரையை 20-03-2018 அன்று செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம் பெருந்திரளோடு நடந்து முடிந்துள்ளது.

நாம் எதிர்பாராத அரசியல் விளைவுகள் மூலம் பலப்படுத்தியுள்ளது. பத்து மாவட்டங்களில் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவலாக்கப்பட்டது.

rama rajya ratha yatra agitation

#செங்கோட்டை_போராட்டம்_வெற்றி

தோழர் தொல்.திருமாவளவன் - வி.சி.க
தோழர் கொளத்தூர் மணி - தி.வி.க
தோழர் வேல்முருகன் - த.வா.க
தோழர் கு.இராமகிருஷ்ணன் - த.பெ.தி.க
தோழர் ஜவாஹிருல்லா - ம.ம.க
தோழர் தெகலான்பாகவி - எஸ்.டி.பி.ஐ
தோழர் கே.எம்.சரீப் - த.ம.ஜ.க
தோழர் திருவள்ளுவன் - தமிழ்ப்புலிகள்

உள்ளிட்ட தலைவர்கள் செங்கோட்டை மறியலுக்கு வரும் வழியில் செங்கல்பட்டு, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என முன்னெச்சரிக்கை எனும் பேரில் மார்ச் 19, 20 கைது செய்யப்பட்டனர். முதல் நாள் இரவு முதல் தமிழ்நாடெங்கும் முன்னெச்சரிக்கைக் கைதுகள் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது. இரவு கிளம்பிய பேருந்துகள், வண்டிகள் காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. இரவு முழுவதும் தென்காசி, செங்கோட்டையில் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

#அடக்குமுறை_144_தடை_உத்தரவு_தகர்ப்பு

காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில்

தோழர் சீமான் - நாம் தமிழர் கட்சி
தோழர் வன்னியரசு - விடுதலைச் சிறுத்தைகள்
தோழர் கெளஸ் - மனிதநேய மக்கள் கட்சி
தோழர் நிஜாம் - எஸ்.டி.பி.ஐ
தோழர் குணங்குடி அனீபா - த.மு.மு.க
தோழர் எஸ்.எஸ்.ஆரூண்ரசீது - ம.ஜ.கட்சி
தோழர் ஹாலித் முகமது- பி.எஃ.ஐ
தோழர் பாலன் - த.தே.ம.முன்னணி
தோழர் எம்.முகம்மதுஅலி - இ.தே.லீக்.கட்சி
தோழர் அப்துல்காதர் மன்பயி - ஐ.என்.டி.ஜே
தோழர் நிஜாம் - ம.தி.மு.க
தோழர் பாளை ரஃபீக் - ம.ம.மு.கழகம்
தோழர் இராசேந்திரன் - ம.தி.மு.க
தோழர் அரங்க.குணசேகரன்- த.ம.பு.கழகம்
தோழர் செந்தில் - இளந்தமிழகம்
தோழர் பொ.பா.இராமசாமி - த.தே.ம.ம.க
தோழர் நாகேஸ்வரன் - பெரியார் பேரவை
தோழர் மகாமணி - மே17 இயக்கம்
தோழர நாஞ்சில் வளவன் - ஆ.த.பேரவை
தோழர் குமார் - தமிழ்ப் புலிகள்

உள்ளிட்ட தலைவர்கள், அமைப்புகளின் தோழர்கள், ஆதரவாளர்கள் 144 தடை உத்தரவு, காவல்துறையின் அடக்குமுறையை மீறி 2000 பேருக்கு மேல் திரண்டு மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நான்கு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இரதம் ஓடியது.

மார்ச் 18 அன்று கடையநல்லூரில் இ.யூ.மு.லீக் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுதாகீர் அவர்களை காவிபயங்கரவாத எ.ம.கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் மீ.த.பாண்டியன் உடன் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன் மற்றும் மனிதநேய சனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ பொறுப்பாளர்கள் சந்தித்தோம்.

மார்ச் 19 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடையநல்லூர்
ச.ம.உ. முகம்மது அபுபக்கர் - இ.யூ.மு.லீக்,
ச.ம.உ. தமீம் அன்சாரி - மனிதநேய சனநாயக் கட்சி
ச.ம.உ. தனியரசு - கொங்கு இளைஞர் பேரவை
ச.ம.உ. கருணாஸ் - முக்குல..புலிப்படை ஆகியோர் கேள்வி எழுப்பி வெளிநடப்புச் செய்தனர்.

மார்ச் 20 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் 144 தடையைக் கண்டித்து, ரத யத்திரையை அனுமதித்ததைக் கண்டித்து, தலைவர்கள் கைதைக் கண்டித்து முழக்கமிட்டு வெளியேற்றப்பட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டனர்.

மார்ச் 21, 22 இன்றும் கூட மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருநெல்வேலி எனப் போராட்டம் தொடர்கிறது. பலத்த காவல்துறை பாதுகப்புடன் இரதயாத்திரை ஓட்டி வருகின்றனர். இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய இரதம் கீழக்கரைக்குள் வர முயற்சித்துள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுத் தோழர் அற்புதக்குமார் - வி.சி.க தலைமையில் நாம் தமிழர் கட்சி/ ம.ம.க/ எஸ்.டி.பி.ஐ/ ஐ.என்.டி.ஜே உள்ளிட்ட 50 தோழர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணிக்கு காவல்துறை கைது செய்து இரவு 8 மணிக்கு விடுதலை செய்துள்ளது. கீழக்கரைக்குள் வராமல் காவல்துறை பாதுகாப்புடன் முக்கியச் சாலை வழியாகவே அனுப்பி வைத்துள்ளனர்.

காவிபயங்கர எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் அறைகூவலை அரசியல் செயல்பாடாக மாற்றி காவிபயங்கர எதிர்ப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்த அனைத்துக் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள், தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் ம்ககள் கூட்டமைப்பின் நன்றி கலந்த போராட்ட வழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து ஓரணியில் திரண்டு முன் நிற்போம்!
காவிப்பாசிசத்திற்கு எதிராக அணிதிரள்வோம்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான மதச்சார்பற்ற
சனநாயகச் சூழலைப் பாதுகாப்போம்!

- மீ.த.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர், காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு