ramea book2018 ஆம் ஆண்டின் சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழாவின் போது, பழந்தமிழ் இலக்கியமான புறநானூற்றுக்கு இணையாக இராமியா (ஆர்.ஆர்.குபேந்திரன்) எழுதிய புதுநானூறு என்ற புத்தகமும், தீக்கதிர், சிந்தனையாளன் பத்திரிக்கைகளில் அவர் எழுதி வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பான புதிய பாடம் என்ற புத்தகமும் வெளியிடப்பட இருக்கின்றன.

பது நானூறு புத்தகத்தை, புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர், கவிஞர் திரு.தமிழேந்தி வெளியிடுகிறார். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முன்னாள் உதவித் திட்ட அமைப்பாளரும், தமிழ் மொழி ஆர்வலரும், பெரியார் பற்றாளருமான முத்துக்கிருஷ்ணன் முதல் படியைப் பெற்றுக் கொள்கிறார்.

புதிய பாடம் புத்தகத்தை, இளைய தலைமுறையைச் சேர்ந்த திரு.கோ.இரா.வெற்றி வெளியிடுகிறார். திரைப் படத் துறையைச் சேர்ந்தவரும், ஜுட்டிசன்ஸ் ஆட் பேஜ் செய்திப் பத்திரிக்கை ஆசிரியருமான திரு.இராம.ஈஸ்வர்லால் முதல் படியைப் பெற்றுக் கொள்கிறார்.

அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 

நாள்: 7.1.2018 ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 10 மணி

இடம்: சந்திர சேகர் திருமண மண்டபம், 34, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600033

(காசி விஸ்வநாதர் கோவில், மேட்லி தெரு சுரங்கப் பாதைக்கு மிக அருகில்)