1) ஆகஸ்ட் 1ம் தேதி தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் நகுல் சிங் இயக்கிய முசாஃப்ர் நகர் பாக்கி ஹே எனும் ஆவணப்படத்தைத் திரையிட முற்பட்டபோது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் தகராறு செய்து திரையிடல் நிறுத்தினர்.

பல்கலைக்கழக நிர்வாகமும் திரையிடலை நிறுத்தியது.

ஆனால் மாணவர்கள் உணவு விடுதியில் படுக்கை விரிப்பைத் திரையாகப் பயன்படுத்தி திரையிடலை நடத்தினர்.

இந்த நிகழ்வை நினைவு கூர்வதற்காகவும், பாசிசத்தைக் கண்டிப்பதற்காகவும், கருத்துரிமையைப் பாதுக்காக்கவும் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் ஆகஸ்ட் 25ம் நாள் கண்டனத் திரையிடல்கள் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.

சென்னையிலும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் சார்பாக ஆகஸ்ட் 25ம் நாள் பெசன்ட் நகர் ஸ்பேசஸ் வளாகத்தில் திரையிடல் நடைபெறுகிறது.

2) ஏன் ஆகஸ்ட் 25?

இதே போல இன்னொரு இயக்குநர் சுபரதீப் சக்ரபர்த்தி இதே முசாஃபர் நகர் கலவரம் பற்றி சென்ற ஆண்டு எடுத்த "இன் தினோ முசாஃபர் நகர்" எனும் படம் இதே வலதுசாரி குண்டர்க்ளால் கடும் எதிப்பைச சந்தித்தது. திரையிடல்கள் நிறுத்தப்பட்டன. வழக்குகள் போடப்பட்டன. அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடும் மன உளச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளான இயக்குநர் சக்ரபர்த்தி மூளையில் ரத்தநாளம் வெடித்து 25 ஆகஸ்ட் 2014 அன்று இறந்து போனார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முதல் முசாஃபர் நகர் கலவரம் வரை பல்வேறு வன்முறைச் சம்பவங்களினால் பலன் அடைந்தே மோடி பிரதமர் ஆனார் என்கிற வாதத்தை முன் வைக்கும் படி 5 படங்களை எடுத்திருந்தார் சுப்ரதீப் சக்ரபர்த்தி. ஒரு பாசிஸ்ட்டின் வரலாற்றை மிகவும் தைரியமாக, புத்திசாலித்தனமாக, விளக்கமாக கடும் உழைப்பினைக் கொண்டு கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஆவணப்படுத்தினார் சுப்ரதீப்.

நெருக்கடிக்கு உள்ளான நகுல் சிங்கின் ஆவணப்படத்தை சுப்ரதீப்பின் நினைவு நாளில் திரையடுவதன் மூலம் சுப்ரதீப்பையும் நினைவு கூர்வோம்.

சுப்ரதீப் எதிர்கொண்ட அதே எதிர்ப்பு இப்போது நகுல் சிங் படத்திற்கும் வருவது இப்படிப் பட்ட எல்லா ஆவணப்படங்களுக்கும் நிகழும் நெருக்கடிகள் என்பதை உணர்ந்து அந்த தொடர்ச்சியை மனதில் கொண்டு இந்தத் திரையிடலை நடத்துகிறோம்.

சென்னையில் இருக்கும் ஆர்வமுள்ள, அக்கறையுள்ள கலைஞர்கள், படைப்பாளிகள், இயக்குநர்கள், பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: சென்னையைத் தவிர மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் அதே நாளில் கண்டனத் திரையிடல்கள் நடைபெறவிருக்கின்றன.

- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை