கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்புக் குழு தோழரும் ... தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க பொதுசெயலாளருமான நாமக்கல் பொத்தனூர் மதியழகன் அவர்களை கடந்த மே -27 முதல் பொத்தனூர் கோவில் பிரட்சினையைக் காட்டி குண்டர் தடுப்பு சட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சிறையில் அடைத்துள்ளார் ...

பொத்தனூர் மதியழகன் ஒரு சமூக நல ஆர்வலர், சட்ட ஆர்வலர், சமூகப் போராளி .

நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் அணைத்து அநீதிகளுக்கும் எதிராக..
சுரண்டல்களுக்கு எதிராக..
இயற்கையைக் காப்பதற்காக..
மனித உரிமைகளைக் காப்பதற்காக..
சுற்றுசூழலைக் காப்பதற்காக..
சமூக நலத்திற்காக தொடர்ந்து களமிறங்கி போராடுபவர்.

கடந்த பத்து ஆண்டுகளில் 3000 எண்ணிக்கை அளவில் அரசு அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டத்தில் தகவல் பெற்றவர். தகவல் உரிமை சட்டத்தில் உள்ள 2 (j) பிரிவை பயன்படுத்தி அதிகாரிகள் மறைத்த எண்ணற்ற தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர் . தமிழக கவர்னர் அலுவலகத்தையே ஆய்வு செய்தவர் . ஜனாதிபதி அலுவலகத்தையும் ஆய்வு செய்ய அனுமதி பெற்றவர் .

நாமக்கல் மாவட்டத்தில் சமுக ஆர்வலர்களின் தொடர்ந்த செயல்பாட்டினால், தவறு செய்த எண்ணற்ற அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர் .

இந்த நாடு மக்களாட்சி நடைபெறுகிற நாடு. இங்கு மக்களின் வரிப்பணத்தில் வேலை செய்யும் எந்த அதிகாரியும் மக்களுக்கு வேலை செய்யவே பணியமர்த்தப் பட்டுள்ளார்கள். எந்த அரசு அலுவலரிடத்திலும், நியாயம் கேட்க.. வேலை செய்யச் சொல்ல மக்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற அடிப்படையில் மாவட்ட் ஆட்சியராக இருந்த உ.சகாயம் அவர்கள் தொடங்கி வைத்த எழுச்சியில் அதிகாரிகளின் தவறுகளை தட்டிக் கேட்பதில் நாமக்கல் மாவட்டம் முன்னணியில் உள்ளது .

நாமக்கல் மாவட்டத்தில் மக்களைப் பார்த்து யார் என்னைக் கேள்வி கேட்க? என்று அதிகார, ஆணவத் திமிரில் யார் பேசினாலும் எந்த அலுவலர் பேசினாலும், அந்த அலுவலர் மக்களுக்கு பணியாற்ற அருகதை அற்றவர்களாகவே பார்த்து அவர்களை முறையாக பணிசெய்ய சொல்லி, சமுக அக்கறை உள்ளவர்கள் செயல்பட்டு அவர்களை முறைபடுத்துகின்றனர்.

சொந்த உழைப்பில் மக்கள் சேவை செய்யும் சமூக ஆர்வலர்களை யார் அவமதித்தாலும் அதை அனுமதிக்காமலும், திருட்டுக் கும்பல்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் துணைபோகும் அரசு அலுவலர்களை இனம்கண்டு, பதவிகளைப் பறிக்கும் பணிகளை சட்டப்படி மேற்கொள்கின்றனர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமுக அக்கறையுள்ளவர்கள். அவர்களில் முதன்மையானவர் தோழர். மதியழகன்.

குறிப்பாக பரமத்தி வேலூர காவல்நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் சட்டவிரோதமான முறையில் 10 பேரைக் கைது செய்து, அவர்களுக்கு கைவிலங்கு போட்டு , கடுமையாக தாக்கியதை எதிர்த்து, தேசிய மனித உரிமை ஆணையம் வரை கொண்டு சென்று அது தற்போது விசாரணைக்கு வந்து டி.எஸ்.பி., ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட காவல்துறை அதிகாரிகள் பதவி இழக்கும் நடவடிக்கையை எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரரான மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் அவர்கள் ஒரே எண்ணில் இரண்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த்தார். ( காவல்துறை வெப்சைட்டில் : பரமத்தி வேலூர காவல்நிலையம் DATE:13.12.2014 ,FIR 670/2014 வழக்கு - பிரிவு 110 சி .ஆர்.பி.சி. என்றும்,; நீதிமனறத்தில் பரமத்தி வேலூர காவல்நிலையம் DATE:13.12.2014 ,FIR 670/2014 வழக்கு - Sec 147,148,448, 506(ii), 294 (பி ) மற்றும் 3 TPDDL Act என உள்ளது இந்த மோசடியை தோழர். மதியழகன் எடுத்து சென்று அதில் தற்போது காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் அவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையில் உள்ளார் .

நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் தட்சினாமூர்த்தி அவர்கள் தொடர்ந்து சமூக ஆர்வலர்களை கைது செய்து மிரட்டுவது என்பது தொடர்கதையாக உள்ளது. ஏற்கனவே தோழர். மொளசி பூபதி, பெரியவர் செல்லப்பன் ஆகியோர் அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்டு உள்ளனர் .

ஆட்சியர் தட்சினாமூர்த்தி அவர்கள் , பள்ளிபாளையம் SPB காகித ஆலை விரிவாக்க கருத்துக் கேட்புக் கூட்டத்தில்(22-01-2015) என்னை உண்மையான கருத்தைப் பேச விடாமல் காவல்துறையையும், ஆலை அடியாட்களையும் வைத்து தடுத்தும் , தாக்கவும் முயற்சிக்க காரணமாகவும், அக்கூட்டத்தில் சமுக ஆர்வலர்கள் பேச விடாமல் தொடர்ந்து தடுத்துக் கொண்டு இருந்தவர்.

தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கரை, மோகனூர் மணல்குவாரி பிரட்சினையிலும், ராசிபுரம் -மோளப்பாளையம் (510 ஏக்கர்) மலையை வெட்டும் பிரட்சினையிலும், நீதிமன்ற ஆணைப்படி தொடர்ந்து கனிமவள முறைகேடு தொடர்பாக மாதம் ஒரு முறை கூட்ட வேண்டிய சிறப்பு கூட்டத்தையும், அதை கண்காணிக்க வேண்டிய சிறப்பு படை அமைக்காமல் , சட்ட விரோதமாக செயல்படும் நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் தட்சினாமூர்த்தி மீது தொடர்ந்து நீதிமன்ற, அரசு ஆணையை நடைமுறைபடுத்தாய் ஆதாரத்துடன் எண்ணற்ற புகார் கொடுத்தும், தற்போது அவர் மீது பல்வேறு விசாரணை வரவும் காரணமானவர் தோழர். மதியழகன்.

மேலும் நாமக்கல் புதூர்குட்டையை தற்போது (2013-2014)மூடி பிளாட் போட்டு விற்றுள்ள திமு க மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான காந்திசெல்வநின் ஊழலை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப் போராடி வருபவர். பரமத்தி வேலூரில் காந்தி மெமோரியல் டிரஸ்ட் கட்டிடம் -இடம் மோசடி விவகாரத்தில் ஏற்கனவே முன்னால் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன் கைது செய்யக் காரணமாக இருந்தவர் .

இப்படி மாவட்ட எஸ்.பி.., ஆட்சியர்., டி.எஸ்.பி.., ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட எண்ணற்ற அதிகாரிகளின் முறைகேடுகளையும், அரசியல்வாதிகளின் முறைகேடுகளையும் அமபலப்படுத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க காரணமாக் விளங்குபவர் தோழர். மதியழகன்.

இப்படிப்பட்ட தோழர். மதியழகன் அவர்கலை பொத்தனூர் கோவில் பிரட்சினையில் ஒரு வழக்கில் மட்டும் 2 வது நபராக பொய்யாக இணைக்கப்பட்டு உள்ளார் . மற்ற மூன்று வழக்கும்( ஒன்று மற்றும் பலர் என -161 ஸ்டேட்மென்ட் பெரறும், மற்ற இரண்டில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக் குமூலம் அடிப்படையிலும் வழக்குப் பதிவு செய்து குண்டர் சட்டம் போட்டு உள்ளனர்) இவர்கள் கற்பனைக்கு ஏற்ப ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வழக்கில் இட்டுககட்டி தோழர். மதியழகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சிறையில் அடைத்துள்ளார் ...

இதன் மூலம் தோழர். மதியழகன் செயல்பாட்டை முடக்கியும், சமுக ஆர்வலர்களை அச்சுறுத்தவும் நினைக்கிறது நாமக்கல் மாவட்ட நிர்வாகம் .

தோழர். மதியழகன் அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் ...

அடக்குமுறைக்கும், குண்டர் தடுப்பு சட்டத்திறக்கும் அஞ்ச மாட்டோம்
அநீதிக்கெதிராகவும், நீதி வேண்டியும் போராடியே தீருவோம்...

மாவட்ட ஆட்சியர்- காவல்துறை கள்ளக்கூட்டோடு போடப்பட்ட அடக்குமுறையை முறியடிப்போம் !!!

தாய்மண்ணையையும், நியாயத்தையும், சட்டத்தையும் காக்கப் போராடினால் குண்டர் தடுப்பு சட்டமா?

உடைதெறிவோம் அடக்குமுறையை! நிலைநிறுத்துவோம் நீதியை!!!

என முழங்கி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது