1938 இந்தி எதிர்ப்புப் போரில் உயிர்நீத்த நடராசன் - தாளமுத்து நினைவிடத்தில் மொழிப்போர் வரலாற்று மணிமண்டபம் அமைத்திடுக!

நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 சுறவம் திங்கள் 11ஆம் நாள் (25-01-205) ஞாயிறு காலை 9-00 மணியளவில் பேரணி புறப்படும்.

புறப்படும் இடம் : வள்ளலார் நகர் - அரசு அச்சகம், தங்கசாலை அருகில்

சேரும் இடம் : மொழிப்போர் ஈகியர் நினைவிடம் மூலக்கொத்தளம்

தலைமை : புலவர் கி.த.ப. பச்சையப்பன், ஒருங்கிணைப்பாளர்

பங்குபெறும் அமைப்புகள்

உலகத் தமிழ்க் கழகம், தமிழர் தேசிய முன்னணி, தமிழகத்
தமிழாசிரியர் கழகம் தமிழ்த் தேசிய விடுதலைக் கழகம்,
தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழர் முன்னணி
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மாணவர் இணையம்
காஞ்சி கலைக் குழு இராசராசன் நுண்கலைக் கழகம்
மக்கள் இணையம்

தமிழ் அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றுப் பேரணி வெற்றிபெற மூலக்கொத்தளம் நோக்கி அணி திரள வேண்டுகிறோம்.

முடியவில்லை மொழிப்போர்

என்னதான் தமிழர்கள் தமிழ்காக்க தொடர்ந்து போராடினாலும் இந்தியப் பேரரசு அன்றுதொட்டு இன்றுவரை இந்தியைத் தமிழர்கள் மீது திணிக்கப் பலவழிகளில் முயன்று வருகிறது. பழம் பெருமையும் இலக்கிய இலக்கண வளமிருந்தும் நம் தாய்மொழியான தமிழ் மொழியை அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தத் தடை செய்து வருகின்றனர் ஆட்சியாளர்கள்.

அண்மையில் ஆட்சிக் கட்டில் ஏறிய பா.ச.க. அரசு ஆங்கிலம் அந்நிய மொழி அதை அகற்றிஇந்திய மக்கள் அதிகம் பேசும் மொழி என்பதன் பெயரால் இந்தியைத் தமிழர்கள்மீது திணிக்கவும் சமற்கிருதத்தை நடுவண் பள்ளிகளில் மாணவர்களிடம் பரப்பவும் தீவிரம் காட்டி வருகிறது. நடுவண் அரசு. அலுவலகங்களிலும் இந்தியைத் திணித்து வருகிறது.

தமிழர்களின் தாய்மொழியாம் தமிழ்மொழியைப் புறக்கணித்து அந்நிய மொழியான இந்தியைத் திணிக்க நடுவண்அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்தி பேசும் மக்களாகத் தமிழ் மக்களைமாற்றக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்கிறது. வெள்ளையன் ஆண்டபோது 1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில் நடராசன், தாளமுத்து சிறையிலேயே மாண்டனர்.

அடுத்து நடந்த 1948,1953, 1958, 1963, 1965 நடைபெற்ற மொழிப்போரில் தமிழர்கள் தாக்கப்பட்டு நூற்றுக் கணக்கனோர் படுகொலை செய்யப்பட்டனர். பொய் வாக்குறுதிகளை வழங்கி இந்தியைத் திணிக்க முயல்கிறதேயன்றி தமிழர்களின் வளம் மிக்க மொழியான தமிழ்மொழியை அனைத்து நிலைகளிலும் ஒழிக்க இந்திய அரசு பெரும் முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டமும் அதற்குத் துணையாக உள்ள நிலைமைகள்தான் இன்றும் உள்ளன. ஆகவே, தமிழர்கள் தங்கள் தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து போர்க்குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் நம்முன் உள்ளது.

இந்திய அரசே!
இந்தியைத் திணிக்காதே!
தமிழை இந்திய ஆட்சிமொழியாக்கு!
தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கு!

தமிழக அரசே!
மொழிப்போர் ஈகிகளின் போராட்ட வரலாற்றை பாடப்புத்தகத்தில் கொண்டு வா!
மூலக்கொத்தளம் நடராசன் - தாளமுத்து நினைவிடத்தில் மொழிப்போர் வரலாற்றை நினைவூட்டும் வகையில் மணிமண்டபம் எழுப்பி வரலாற்றைப் பதிவு செய்!
தமிழகத்தில் கல்வி, நிருவாக, நீதி மொழியாக, வழிபாட்டுமொழியாகத் தமிழை ஆக்கு!
எனவே, அனைவரும் ஆர்த்தெழுவோம்!
இந்தித் திணிப்பை - ஆங்கில ஆதிக்கத்தை முறியடிப்போம்!
மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை!
இருமொழிக் கொள்கை ஏமாற்றுக்கொள்கை
ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை!
எனத் தமிழ் உரிமை காக்க ஒன்றிணைவோம் வாரீர்!