may17 fishermen

600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களைக் கொன்று குவித்த இலங்கை கடற்படை. தினந்தோறும் சித்ரவதைக்கு உள்ளாகும் தமிழக மீனவர்கள்.

நமக்கு உணவளிப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் செல்கிற நம் மீனவர்கள் அடிவாங்கினாலும், செத்து விழுந்தாலும் கேட்க நாதியற்றவர்களா என்ன?

கொன்று குவிக்கிறது இலங்கை கடற்படை. கை குலுக்கி உறவு காக்கிறது இந்தியா. இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தால்கூட தமிழ் மீனவன் தான் சாகிறான். நமது மீனவர் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக நம் மீனவன் கடலில் கொல்லப்படுகிறான். இது இனப்படுகொலையின் தொடர்ச்சியே. இந்த இனப்படுகொலையில் இந்தியா கொலையாளியுடன் கைகோர்ப்பது ஏன்?

நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை.

எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே.

மீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரைப் படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்தக் கொடுமைகள் நிகழாது போயிருக்கும்.

கடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை.

நம் மீனவனுக்கு நீதி கேட்க ஒரு நாள் கூட மாட்டோமா நாம்?

நவம்பர் 16 காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் கூடுவோம்.

தமிழர் கடலை பாரம்பரிய மீன்பிடி பகுதியாக அறிவி.
மீன்பிடி உரிமையை உறுதி செய்.
சிங்கள கடற்படை தளபதிகளை கைது செய்.

அனைவரையும் அழைக்கிறோம்!