poovulagin nanbargal

இயற்கை செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும். அது இந்த பூமியில் உள்ள உயிர் இனங்கள் செழித்து வாழத்தான். நதிகளுக்கு என்று ஒரு தேவை இருக்கிறது இந்த பூமியில். நதிகள் ஒன்றும் "பொறியியல் கல்லூரியில்" படித்த பொறியாளர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. தற்போது பதவி ஏற்று இருக்கும் அரசு "நதிநீர் இணைப்பு" தான் இந்தியாவின் "சர்வரோக நிவாரணியாக" சொல்கிறது. அது உண்மையா?

வாருங்கள் விவாதிப்போம்... வரும் வெளிக்கிழமை மாலை 5 மணியளவில், மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள "கவிக்கோ" அரங்கத்தில்.

விவாத நிகழ்வில் பேரா.ஜனகராஜன் (MIDS), ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை மேற்பார்வை பொறியாளர் பாலுசாமி, நாம் தமிழர் கட்சியை சார்ந்த திரு.அய்யநாதன், தி.மு.க வை சேர்ந்த வழக்கறிஞர் K.S . ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

விவாதிப்போம்.. உண்மையைக் கண்டு அறிவோம்...

- பூவுலகின் நண்பர்கள்