gomathinayagam_500

"இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் தமிழ்ப் பாரம்பரியத்தி்ன் அடியொற்றி நீர், நிலம், சூழல், வளம் பற்றிய விரிவான தகவல்களுடன் ஆழமான வாதங்களையும் அக்கறைமிக்க கவலையையும் பதிவு செய்கிறார் ஆசிரியர் முனைவர் பழ. கோமதிநாயகம்"

தலைமை : தோழர் வெ. வீரசேனன், இயக்குநர், என். சி. பி. எச்

நூலை வெளியிடுபவர் : திரு. கோ. நம்மாழ்வார், இயற்கை வேளாண் அறிஞர்

பெற்றுக் கொள்பவர் : டாக்டர் வி. ஜீவானந்தம், தலைவர் பசுமை இயக்கம்

கருத்துரை : திரு. பழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

வரவேற்பு : எம். பாண்டியராஜன், ஊடகவியலாளர்

நன்றி : தி. ரத்தினசபாபதி, பொது மேலாளர், பாவை

முனைவர் பழ. கோமதிநாயகம் - பாசன பொறியியல் வல்லுநரான இவர், தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வளம் மற்றும் பாசன மேலாண்மைசார் துறைகளில் பணியாற்றி, வடிவமைப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பிலிருந்த போது விருப்ப ஓய்வு பெற்றார்.

சாயத் தொழிற்சாலைகளால் நொய்யல், அமராவதி ஆறுகளில் ஏற்படும் பாதிப்புகளை களைவதற்குரிய ஆலோசனை வழங்குவதற்காக சென்னை உயர்நீதி மன்றம் அமைத்த வல்லுநர் குழுக்களில் இவருடைய பங்கு பணி குறிப்பிடத்தக்கது. நீர் நிலைகள் பாதுகாப்பு விசயத்திலும் மணற்கொள்ளைக்கும் ஊழலுக்கும் எதிராகவும் தீவிரமாக இயங்கி வந்தவர் திரு. பழ. கோமதிநாயகம்.

துறைகளிலும் வெளியிலும் தன் வாழ்நாள் முழுவதும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் “மக்களுக்காக“ என்ற எண்ணத்திலேயே பயன்படுத்திச் செயல்பட்டு, ஒரு சமூகப் போராளியாகவே வாழ்ந்து, 2009, டிசம்பர் 29-இல் மறைந்தார்.