நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் "SAY NO TO SRI LANKA" செயல்மையம் சிறிலங்காவைப் புறக்கணிப்போம் எனும் கருப்பொருளிலான குறும் பரப்புரை படங்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது.

அரசியல், வர்த்தகம், பொளாதாரம், உல்லாசம் என பல்வேறு துறைகளிலும் சிறிலங்காவினை புறக்கணிக்கும் மையக்கருவினை கொண்டதான படைப்புக்களுக்கான அழைப்பாக இது அமைந்துள்ளது.

புலம்பெயர் தேசங்களில் வளர்ந்து வரும் இளம் தமிழ்கலைஞர்கள் தங்கள் கவனத்தினை குறும்படங்கள் மீது செலுத்தி வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளிவந்துள்ளது.

உலகத் தமிழ் படைப்பாளிகளுக்கான அழைப்பாக விடுக்கப்பட்டுள்ள இப்போட்டியில் பங்கெடுக்கும் சிறந்த படைப்புக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட இருப்பதோடு, ஒவ்வொரு படைப்பும் விழிப்பினை ஏற்படுத்தட்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக அரங்கில் சிறிலங்காவினை தனிமைப்படுத்தவும், அம்பலப்படுத்தவும் அமையும் சிறிலங்கா புறக்கணிப்பு போராட்ட வடிவமானது சிறிலங்காவுக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தவல்லது.

ஒவ்வொரு குறும் பரப்புரை படைப்புக்களுக்கான கால அளவாக 7 நிமிடம் வரை அமைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, போட்டியில் பங்கெடுப்பதற்கான முற்பதிவினை எதிர்வரும் 31/08/2013 திகதிக்கு முன்னர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.