முந்நீர் விழவு – நீரைக் கொண்டாடுவோம்

சங்க கால மன்னர்கள் நீர்நிலைகள் மாசுபடாமல் இருக்க நடத்தியதுதான் முந்நீர் விழவு. இவ்வுலகில் நீரை பாதுகாத்தவர்களின் பெயர்கள் நிலைக்குமென்றும் அவ்வாறு செய்ய தவறியவர்களின் பெயர்கள் நிலைக்காது என்றும் சொல்கிறார் குடபுலவியனார்.21வது நூற்றாண்டின் எண்ணை என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு அரிதான விஷயமாக மாறி வருகின்ற நீர் குறித்த விவாதங்களை உருவாக்கவும் அதை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நமது சங்ககால மரபான முந்நீர் விழவை மீட்டெடுப்பது  முக்கிய கடமையாகிறது.

சென்னை லயோலா கல்லூரியின் என்விரோ கிளப்புடன் இணைந்து பூவுலகின் நண்பர்கள் ஜனவரி 26 அன்று நடத்தும் முந்நீர் விழவு உங்களுக்கும், எங்களுக்கும், நமக்குமான வாழ்வியல் ஆதாரத்தை பாதுகாக்கும் எளிய முயற்சி. இந்த நிகழ்வில் முந்நீர் (கடல்), நன்னீர் (ஆற்றுநீர்), இந்நீர் (குடி நீர்) ஆகிய தலைப்புகளிலும் தேசிய நீர் கொள்கை வரைவு பற்றியும் விவாதங்களை உருவாக்கும் பொருட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் களப்பணியாளர்களும் பங்கு கொள்கிறார்கள்.

தமிழர்களின் விழவுகளில் உணவுக்கும் இசைக்கும் முக்கிய பங்கு உண்டு. புத்தக அரங்குகள், புகைப்பட கண்காட்சிகள் தவிர தமிழ் பழங்குடியினரின் கலை நிகழ்வுகளும் இந்த முந்நீர் விழவில் இடம் பெறும். நிகழ்வின் இறுதியாக பாரம்பரிய  அசைவ உணவு திருவிழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சுற்றுசூழல் பற்றிய கரிசனங்களை, மாற்று சிந்தனைகளை தொடர்ந்து எடுத்துச்செல்ல அனைவரும் இந்த முந்நீர் விழவில் கைகோர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

munner_invitation_600

traditional_food_festival_600