சாதியை ஒழிக்க வேண்டும் என்று குரல்கள் ஒலித்த அளவுக்கு சாதிகளற்ற, ஆணாதிக்கம் ஒழிந்த சமூகத்தைப் படைப்பதற்கான குரல்கள் போதுமான அளவு எழவில்லை. சாதியே இல்லாதவர்கள் இனி இங்கு நிற்பதற்கு என்ன இடம் இருக்கிறது? இந்த சாதியற்ற தளமென்பது வெறும் பேச்சுக்களால், எழுத்துக்களால் உருவாக்கப்பட முடிந்த ஒன்றல்ல. சாதியற்ற மனிதர்களின் உறவுகளினால் படைக்கப்பட வேண்டிய புத்துலகு அது. இந்த மாபெரும் பணியில் 'புதிய குரல்' அமைப்பின் ஒரு சிறிய முயற்சி இந்த அழைப்பு.

பெரியார், அம்பேத்கர் வழி வந்த தோழர்கள் குடும்பங்களுடன் 6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு சுற்றுலாத் தளத்தில் சந்தித்துக் கொள்வது; அதில் அரசியல் வகுப்புகளிலிருந்து குழந்தைகளுக்கான போட்டிகள், பொதுவிவாதங்கள் வரை நடத்தி அறிவைப் பெறுவது, அறிவைப் பகிர்ந்து கொள்வது; அனுபவங்களை, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது; எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளுக்கு சாதியைக் கடந்த உறவுகளை அறிமுகப்படுத்துவது. இந்த நோக்கங்களுடன் நமது உறவுக்கூடல் குற்றாலத்தில் வரும் அக்டோபர் 12, 13, 14 தேதிகளில் நடக்கவுள்ளது.

இந்த நிகழ்வினை 6 மாதத்திற்கு ஒரு முறை வெவ்வேறு இடங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

குற்றாலம் உறவுக்கூடலில் உரைவீச்சு வழங்க இருக்கும் கருத்தாளர்கள் பற்றிய விவரங்களைக் கீழ்க்கண்ட பட்டியலில் காணவும். 

  1. ’18-ஆம் நூற்றாண்டு தமிழகம்’

டாக்டர்.ஜெயராமன், நூலாசிரியர், ’காந்தியின் தீண்டாமை’

  1. ‘18-ஆம் நூற்றாண்டில் பெண்கள் மற்றும் பெண்கள் வாழ்நிலை’

 பேராசிரியை.சரசுவதி, தலைவர், PUCL, தமிழ்நாடு- புதுவை

  1. ’19-ஆம் நூற்றாண்டு தமிழகம்’

புலவர். செந்தலை.ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை, கோவை

தோழர்.பாண்டியன்

  1. ‘19-ஆம் நூற்றாண்டில் பெண்கள் மற்றும் பெண்கள் வாழ்நிலை’

திருமிகு. ரமணி, கருத்தாளர்

  1. ’20- ஆம் நூற்றாண்டு தமிழகம்’

தோழர்.தியாகு

  1. ’20-ஆம் நூற்றாண்டில் பெண்கள் மற்றும் பெண்கள் வாழ்நிலை’

தோழர்.ஜெனிஃபர்,எழுத்தாளர், தோழர்.தமயந்தி,வழக்கறிஞர்

  1. ’21- ஆம் நூற்றாண்டு தமிழகம்’

திரு.ராசிபன்னீர்செல்வம், மாவட்டத் துணைத்தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 

  1. ’21-ஆம் நூற்றாண்டில் பெண்கள் மற்றும் பெண்கள் வாழ்நிலை’

தோழர்.ஓவியா, தோழர்.விஜி, பெண்ணியலாளர்கள்.

 கட்டணம் பற்றிய விவரங்கள்

இந்த இடம் குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் இந்த இடத்தை அடைவதற்கான அதிகபட்ச கட்டணம் 40 ரூபாய்

உறவுக்கூடலில் இருபாலருக்கும் தனித்தனி கூடம்; ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி கட்டில் வழங்கப்படும். இதற்கான கட்டணம் நபர் ஒருவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.100 மட்டும்

தனிஅறை வசதி (வேண்டுவோர்)

வெப்பச்சீர்மை வசதி இல்லாத, இருவர் தங்கும் ஒரு அறையின் ஒரு நாள் வாடகை ரூ.1300/- வெப்பச்சீர்மை வசதி வேண்டுவோர், செலுத்தவேண்டிய கூடுதல் கட்டணம், ஒரு நாளைக்கு ரூ.500/- தனிஅறை வசதியைத் தேர்வு செய்யும் நபர்கள் முன்பதிவு உதவிக்காக, தோழர். விஜி அவர்களை உடனே தொடர்பு கொள்ளவும்.

நிகழ்ச்சி நடத்த இருக்கும் கூடத்திற்கான வாடகை, தங்கும் கூடத்திற்கான வாடகை, அருவிக்கு சென்றுவருவதற்கான போக்குவரத்து செலவுகள், சிறப்பு விருந்தினர்களின் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிற்கான செலவுத்தொகை ஆகியவற்றையும், பிற முக்கிய செலவுகளையும் உள்ளடக்கிய மொத்த செலவுத்தொகையை பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். இந்த செலவு விவரங்கள் இறுதி நாளன்று ஒப்படைக்கப்படும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், நபருக்கு தலா 1000 ரூபாயை கீழ்கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்திடுமாறு வேண்டுகிறோம்.

P.MURUGANANDHAM / Savings Bank Account No: 452592795/ Indian Bank, Neruji Nagar Branch Dindigul 

தங்கள் வருகையைப் பதிவு செய்ய‌ கீழ்காணும் நபர்களைத் தொடர்பு கொள்ளவும்:

விஜி, தொலைபேசி எண் 9486227822

நர்மதா, தொலைபேசி எண் 9940686107

ஓவியா,  மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., அஞ்சல் முகவரி: ஓவியா, பழைய எண்: 21, புதிய எண் 86, மேற்கு மாட வீதி, நுங்கம்பாக்கம், சென்னை-34. 

அன்புடன்

ஓவியா