kaviji book 600தலைப்பிற்கும் புத்தகத்திற்கும் சம்மந்தமில்லை.
மகன் முட்டி யானை குடைசாய்ந்த பேரன்புக்கு அன்பளிக்கவே இந்தப் புத்தகம் ...

அன்பு -சே குட்டிக்கு...
எறும்பு முத்தம்...

மூன்று வரிகளில்
கனவை நிறுத்தி
காதலை நையப் புடைத்து
காதலால் வாழ்வை ஊடுருவுகிறார்...

அந்தக் கவிதை அற்புதம்
இந்தக் கவிதை அபாரம்
இதோ நொறுக்கி இருக்கிறார்
அடி பொலி... மழை இடி... நெத்தியடி...
என்போர்களுக்கு என்ன சொல்ல

இந்தக் கவிதைகள் அனைத்துமே
வாழ்ந்து கொண்டாடிய நிமிடங்களை
எதார்த்த உண்மைகளை
நமது வாழ்வை அவர் மகிழ்ந்து
காதலித்து சொற்களால் சேமித்து
கட்டிய மேக மாளிகை...

கவிஜி ஒரு பறவை
எல்லையில்லாது எழுதுபவர்
வாழ்வை எழுத்தாக்கிக் கொண்டவர்
எதிர்கால இலக்கியம் இவரது பிடியில்
பாரபட்சமின்றி பேரன்பை விதைப்பவர்
இவரது எழுத்துக்களும் அப்படித்தான் யாவும் முத்துக்கள்...
எளிய நடையில் பழகு தமிழில் முத்தமிட்டு உரையாடும் இயல்பு
இவர் எழுத்துக்கு வலு...

கவிஜி ஊதா நிறக் காதலன்...
பேரன்புக்கார மானுடன்...
நிழல் தேசத்துக்கார யுத்தன்...
சிவப்பு மஞ்சள் சித்தாந்தன்...

ஒவ்வொரு கவிதையும் எடுத்துக்காட்ட
மற்றவையெலாம் சருகல்ல ...
யாவும் வாழ்வென்பேன்...
நீங்கள் வாசித்துக் கொண்டாடுங்கள் வாழ்வை உணருங்கள்...

மூன்று வரி எறும்பு முட்டி
யானை வாசகர்களை சாய்த்து விட்டீர்...

அலாதி ப்ரியங்கள் டியர்...
வாழ்த்துக்கள்...

- சே குவேரா சுகன்