இலக்கிய உலகம் மிகப் பரந்தது. எழுதுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். எழுத்திலும் எழுதப்படும் பொருளிலும் புதுமையையும் தனித்தன்மையையும் மக்கயைளயும் புகுத்த வேண்டும். அத்தகைய படைப்பாளரே இலக்கியத்தில் நீடிக்க முடியும். நிலைப்பர். இவ்வரிசையில் முக்கியமான படைப்பாளியாக இயங்குபவர் புதிய மாதவி. அவரின் முயற்சியில் வந்திருக்கும் தொகுப்பு ‘தனியறை’.

தனியறை என்பது அந்தரங்கமானது. தனியறைக்குள் இருக்கும் போதே மனிதாpன் சுயம் வெளிப்படும் . மெய்யான முகம் தெரியும். ஆனால் புதிய மாதவி காட்டும் ‘தனியறைகள்’ வித்தியாசமானவை. ஒவ்வொன்றிலும் ஒரு சோகம் இருக்கிறது. ஒரு பிரச்சனை இருக்கிறது.

புதியதாக திருமணமான மகன், மருமகள் தனியறையில் மகிழ்ச்சியாக இருக்க தான் உறவினர் வீட்டில் படுத்துக் கொள்ள விரும்பும் தாய். தாய் தங்களோடு இருக்க வேண்டும் என்று விரும்பும் மகன், மருமகள். உடலுறவு முக்கியமல்ல உள்ள உறவே முக்கியமே என்கிறது ‘தனியறை 1’. தனியறை 1 போலவே தனியறை 22ம் மகன், மருமகளை தாயை அரவணைக்கும் நல்லவர்களாகவே சித்தாpத்துள்ளார். மாமனார், மாமியார் தனியாக இருக்கட்டும் என தாமதமாக வரும் மருமகளும் உண்டு என்கிறது ‘தனியறை 20’. மாறாக தனிமைக்குக் காத்திருக்கும் ஒரு வயோதிகக் தம்பதியரைக் காட்டுகிறது ‘தனியறை 3 ‘. மாமனார் உடனிருப்பதால் தாம்பத்யத்துக்கு வழியின்றி தவிக்கும் ஓர் இணையைக் கூறுகிறது ‘தனியறை 21 ‘. தனியறையில் வாழ்பவர்களுக்கு அந்தரங்கப் பிரச்சனைகளையும் நாகரிகமாகக் சொல்லியுள்ளார். ஆயினும் தனியறை 2ல் ‘கணவன் மனைவிங்கறது வெறும் செக்ஸ் மட்டுமல்ல. இன்னும் சொல்லப் போனால் ஒரு வயதிற்குப் பின் இருக்கும் இந்தக் காதல் தான். காதல் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தனியறையில்லாயா? என அறிவுரையும் வழங்கியுள்ளார். ’தனியறை 23’லும் இதே கருத்து வெளிப்பட்டுள்ளது. ்சரி. . . நமக்குனு தனியறை நமக்குனு டி. வி. இந்த பெட்ரூமுடன் அட்டேச்ட் பாத்ரூம் வசதி, கதவைத் தட்டிட்டு உள்ள நுழையற அம்மா. . ஆனால் இந்த சிட்டியிலே பலருக்கு தன் அந்தரங்களைப் பகிர்ந்து கொள்ள கூட ‘தனியறை இல்லை தெரியுமா் என கணவன் கூற்றாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தனியறையில் படுக்கையறை ஒரு பிரச்சனை எனினும் அன்றாடப் பிரச்சனையான கழிப்பறையும் ஒரு பிரச்சனையே என்கிறது ‘தனியறை 4’. கழிப்பறை இன்றி காலம் கடத்துவது கொடிது என்கிறது. தான் படும் கக்ஷடத்தைத் தன் சந்ததி படக்கூடாது என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது தனியறை.

‘ஹால் கம் பெட்ரூம் கம் ஸ்டடி ரூமில் ஒரு டி. வி. , ஒரு கபோர்ட், ஒரு சின்னக் கட்டில், ஒரு சின்ன சோபா, ஒரு சின்ன டீபாய்’ என ஒரு தனியறையைக் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார். இக்காட்சி இடம் பெற்ற கதை ‘தனியறை 5 ‘. இதில் தொலைக்காட்சியால்; குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கதை உணர்த்துகிறது. ‘தனியறை 18’ ம் கல்வியையே முதன்மைப் படுத்துகிறது. படிக்கிற வயதில் காதல் வேண்டாம் என்கிறது. வாழ்வில் வசதியான வீட்டுடன் நல்ல நிலைக்கு வந்த பிறகே காதலிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

ஒரே அறையில் ஒரு கணவனும் மனைவியும் தவிர வேறொருவன் இருந்தால் என்ன விளைவு ஏற்படும் என சுட்டிய கதை ‘தனியறை 16’. ஒரு பெண்ணின் பரிதாப நிலையை விளக்குகிறது.

ஒரே அறையில் இரண்டு தம்பதியர்கள் வாழ முடியும், வாழ்கிறார்கள், என்றும் எடுத்துக் காட்டியுள்ளார். மனமே காரணம் என்கிறார். இதன் தலைப்பு ‘தனியறை 7’.

‘தனியறை 8’ வித்தியாசமானது . அப்பாவின் காமவெறிக்குள்ளான அம்மாவின் அவஸ்தையைக் கண்ட ஒரு சிறுவனின் மன உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் சிறுவனின் வாழ்வே திசைமாறி விடுகிறது. சிறுவனை வைத்து எழுதப்பட்ட மற்றொன்று ‘தனியறை 19’. வீட்டு வாடகை தராமல் இருக்க மகனைப் படிக்க வைக்க சேட்டின் அனுபவத்துக்கு ஆளாகிறாள் தாய். ஆனால் மகனுக்குப் பிடிக்க வில்லை. தனியறையை விட கருவறையே மேல் என்கிறது. தாயின் பாசத்துக்குச் சான்று. சேட்டின் ‘சேட்டை’ களையும் விமாpசிக்கிறது. ‘தனியறை 17’ லும் ஒரு சேட்டு வருகிறார். கமலாபாய் என்னும் பெண்ணை சேட் அடைய முயல்கிறான். ஆனால் அவள் மறுக்கிறாள். காரணம் கமலாபாயின் அம்மாவை சேட்டின் அப்பா உறவாடியதுதான் என்கிறார். சேட்டுக்கு அதிர்ச்சி ஏற்பட்டதோ இல்லையோ வாசகரை அதிரச் செய்கிறது.

கவிஞ‌னாயிருந்தாலும் ஒரே அறையில் குடும்பம் நடத்துவது மிக சிரமம் என்கிறது ‘தனியறை 9 ‘. கவிஞ‌னிடமிருந்து வறுமை விலகாது என்றும் கதை விவரிக்கிறது. தனியறை கிடைக்கும் வரை கவிதை எழுதப்போவதில்லை என்னும் முடிவு சோகத்தையே ஏற்படுத்துகிறது. மாறாக எழுதப்பட்டுள்ளது ‘தனியறை 15 ‘. சினிமா கவிஞ‌ருக்கு ஆடம்பர விடுதியில் ஓர் அறை ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ‘மூலக்கதை’ எழுதுபவருக்கு வசிக்கும் அறையே போதுமானதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். சமூகக் கவிஞ‌னுக்கும் சினிமா கவிஞ‌னுக்கும் உள்ள வித்தயாசத்தையும் காணமுடிகிறது.

வசிக்கும் வீட்டுக்கு மேலே ஒரு சிறிய மாடி கட்டுகிறான். அனுமதி பெறாததால் நகராட்சி பணியாளர்கள் வந்து இடித்துத் தள்ளி விடுகின்றனர். மும்பையில் அனுமதி பெறாமல் பல மாடிகள் கட்டப்பட்டிருந்தும் தன் சின்ன மாடி மட்டும் இடித்ததைக் கண்டு மனம் உடைந்து தவிக்கிறான். ‘தனியறை 10’ இத்துயரத்தைச் சொல்கிறது.

வீட்டு வசதி வாரியத்தில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தின் கவலையை ‘தனியறை 11’ல் வாசிக்க முடிகிறது. மகள் கல்யாணத்துக்கு வரும் விருந்தினர்களை எங்கே தங்க வைப்பது என்று பிரச்சனை எழ எதிர்த்த வீட்டில் இருக்கும் முஸ்லீம் குடும்பத்திடம் உதவி கேட்க இடம் தந்து உதவுகின்றனர். உதவும் உள்ளங்களும் உள்ளனர் என்கிறார் ஆசிரியர்.

புதியதாக திருமணம் ஆன இளஞ்சோடி . நண்பர்கள் மீது நம்பிக்கையில்லை. மனைவி மீதும் சந்தேகம். மனைவி புரிந்து கொண்டு கணவன் இல்லாத போது நண்பர்கள் வந்தால் கணவன் இல்லை என்று திருப்பி விடுவதாகத் தெரிவிக்கிறாள். இதுவும் தனியறையில் ஏற்படும் சிக்கலே என்கிறது ‘தனியறை 12 ‘. சந்தேகப்படும் கணவன்களையும் குட்டுகிறது. ‘தனியறை 13’ம் கணவனைச் சாடுகிறது. மற்ற பெண்கள் அலுவலகம் செல்வதை விமாpசிப்பவன், ஏற்றுக் கொள்ள முடியாதவன் தன் மனைவி மட்டும் அவள் அலுவலகத்தில் பணிபுரிபவன் தொல்லை செய்தாலும் பணியைத் தொடர வேண்டும் என்கிறார் . காரணம் பல அறைகள் கொண்ட வீடு வாங்க வேண்டும் என்பதேயாகும்.

ஒருவர் இறந்தால் அவரைப் பற்றிச் சொல்லி அழுவது பெண்கள் வழக்கம். ஆண்கள் அழாமல் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ‘தனயிறை 14’ ல் கணவன் இறந்து விட மனைவி உறவுக்கார பெண்ணிடம் ்எம்மா. . . இந்தக் காலை நீட்டிப் படுக்க முடியாத வீட்டிலேயே காலமெல்லாம் இருந்துவிட்டுப் பேய்;ட்டாரே’ என சொல்லி அழுகிறாள். அழத் தெரியாது என்ற அந்த பெண்ணும் அழுது விடுகிறாள். வாசிப்பவரையும் அழச் செய்கிறது. தனியறை வாழ்க்கை எந்தளவிற்கு பாதித்துள்ளது என இத்’தனியறை’ விளக்குகிறது.

பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக மாமனாரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாள் மருமகள். மனமுடைந்த மாமனார் நண்பரிடம் வருந்துகிறார். ‘‘ஒரு அறையா இருந்தா என்ன? ஒன்பது அறை வச்சிருந்தா என்ன? மனசிலே இடம் இருந்தா இதெல்லாம் பெரிய பிரச்சனையா சொல்லு. ’’. என ஆறுதலளிக்கிறார். இத் ‘தனியறை 16’ அப்பா, அம்மாவைப் பெண் பிள்ளைகளே காப்பாற்றும் என்றும் அறிவுறுத்துகிறது.

தனியறையில் வசிப்பவர்கள் பல அறைகள் கொண்ட வீடுகளுக்கு ஆசையுள்ளவர்களாகவே இத்தொகுப்பிலுள்ள ‘தனியறை’களின் மனிதர்களைத் தாpசிக்க முடிகின்றது. ்உங்களைப் பார்க்கறப்போ சந்தோவக்ஷமா இருக்கும்மா. வாழ்க்கைங்கறது பெரிய பெரிய வீடுகளும் பங்காளவும் மட்டுமில்லே் என ‘தனிறை’க்கு ஆதரவாக உள்ளது ‘தனியறை 24’.

‘‘தனியறை 25’ மூலம் ஒரு நல்ல கதை வாசித்த உணர்வேற்படுகிறது. லோ கட் டி வக்ஷர்ட், டைட் ஸ்கர்ட்டுடன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்ணை வெறுக்கிறார் ஓர் அலுவலர். கேவலமாக நினைக்கிறார். அலுவலகம் முடியும் வேளை பேருந்துகள் இயங்க வில்லை. அந்த இளம் பெண்னே அவளின் தனியறைக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறாள். அவள் இயல்பாவே இருந்தாள். இவருக்கோ குற்ற உணர்வு. அவர் மீதே அவருக்கு வெறுப்பு. உடையை வைத்து ஒரு பெண்ணை தரக் குறைவாக முடிவு செய்யக்கூடாது என்றும் மன்ததில் தவறான எண்ணமில்லை எனில் எங்கும் எவருடனும் தங்க முடியும் என்றும் தெரிவிக்கிறது.

எழுத்தாளர் புதிய மாதவி ஒரு நல்ல கவிஞ‌ரும் ஆவார். இத்தொகுப்பிள் ‘தனியறை 26’ கவிதையாக எழுப்பட்டுள்ளது. இருபத்தைந்து தனியறைகளிலும் பிறரைப் பற்றி பேசியவர் இதில் தன்னை வைத்து எழுதியுள்ளார். மழையைப் பற்றி ஒரு கவிதை எழுதத் தொடங்கியவர் ஒரு மழை நாளைக் கவிதையாகக் காட்சிப்படுத்தியுள்ளார். கண்ணாடி அறைக்குள்ளிருந்து காட்டியுள்ளார்.

வாழ்க்கை என்பது பிரச்சனையே. தனியறையாக இருந்தாலும் பல அறைகள் உள்ளதானாலும் பிரச்சனை இல்லாமலில்லை. தனியறைகளில் உள்ள பிரச்சனைகளை இத்தொகுப்பான ‘தனியறை’ விரிவாக பேசுகிறது. ஒவ்வொரு தனியறையிலும் ஒரு கதையைக் கூறியுள்ளார். எக்கதையும் சோடை போகவில்லை. எல்லா கதைகளிலும் ‘தனியறை’யே நாயகமாக விளங்குகிறது. தனியறைக்குள் வசிப்பவர்களின் உணர்வுகளை நுட்பமாக கிரகித்து அழகாக கதைகளில் கையாண்டுள்ளார். தனியறைகளின் அளவு 8க்கு 10 அடி என்கிறார். புதிய மாதவியின் மொழி ஆளுமை வாசகர்களை வசப்படுத்தி விடும் தன்மைமிக்கது என்பதற்கு இத் தனியறையும் ஒரு சான்று. உரையாடலிடையே ளூpந்தியை பிரேயோகித்திருப்பதும் கதையின் புரிதலுக்குத் தடையில்லை. புதிய மாதவி ஒரு பெண்ணயவாதி என்பதைத் தொகுப்பின் பல இடங்கள் உறுதி செய்கின்றன. ஒரு தனியறையை வைத்து கதை எழுதுவது எளிது. ஆனால் இருபத்தைந்து தனியறைகளை மையமாக்கிக் கதை எழுதி இருப்பது பெரும் சாதனை . அவரின் இப்பெரும் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. அவர் படைப்புலகில் இத்தொகுப்பு உச்சம். அவர் தொடர்ந்து இயங்க வேண்டியது படைப்புலகத்திற்கு அவசியம்.

Pin It