ஒவ்வொருமுறையும்
வார்த்தை முத்துக்களை உதிர்த்து
காதலா நட்பா என சொல்ல
இதயம் பல்லாங்குழியில்லை..
மூடிய கையை நீட்டி
ஒன்றைத் தேர்ந்தெடுக்க
இது ஒத்தையா ரெட்டையா இல்லை..
சிறு தக்கையினை
மணலில் மூடி வைத்து
சரியான இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்ல
இது கிச்சுக் கிச்சு தாம்பாளமில்லை.
மொத்தத்திலென் முடிவை மாத்திக் கொள்ளும்
உத்தேசம் ஏதுமில்லை..
என் நேசமொன்றும்
விளையாட்டுப் பொருளில்லை.

------------------------------------

என் மரணத்தில் கூட
அழுது விடாதே.
உயிர்த்தெழுந்து விடப் போகிறேன்..
உன் கண்ணீர் துளிகளைத் துடைக்க

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It