புலிக்கண்மாயிலே
புளியமரத்தின் ஓரத்திலே
ஓலை குடிசையிலே
வற்றகுழம்பு வாசம் வீசயிலே
சானமிட்ட தரையினிலே
தாயின் மடியினிலே
தலைசாய்த்து படுக்கையிலே
உரங்கிய நேரம் தெரியவில்லை
சுகமாய் எழுந்தேன் காலையிலே
சிங்கை சென்றேன் அன்று மாலையிலே
பஞ்சு மெத்தையிலே
படுத்து புரலுகையிலே
தூக்கம் வரவேயில்லை
நாகரீக உணவினிலே
நாக்கு செத்துப் போனதடி – தாயே
அன்று நீ
அன்பால் பரிமாறிய வற்றகுழம்பு
வாசமிங்கே வீசுதடி……


பாரத் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.