யா௫ம் எழுதாத ஒன்றை
நான் எழுதப் போவதில்லை.

யா௫ம் எழுதமுடியாத ஒன்றையும்
நான் எழுதிவிடப் போவதுமில்லை.

ஆயினும்
எழுதித்தான் தீரவேண்டியி௫க்கிறது.

எவ௫க்காக இல்லையென்றாலும்
எனக்காகவேனும்.

இருப்பு

எப்படி இருக்கிறாய் என்றாய்.
அப்படியேதான் இருக்கிறேன்
என்றேன்.

இப்படி உன் விழிகள் விரிய
அப்படியே இருத்தலென்பது
அத்தனை சிரமமா என்ன?

இயல்பு

என்னாயிற்று என்றேன்.
எதுவுமில்லை என்றாய்.
பின் எதையும்
கேட்கவில்லை நான்.

இயல்பின்றி போவதில்
சம்மதமில்லை எனக்கும்.

- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It