பெண் புரட்சி என்பது
ஏதேன் தோட்டத்து வேலி
தகர்த்துக் கிளம்பிய
முதல் பெண்ணிலிருந்தே
தொடங்கலாம்...
ஆண்கள் வேட்டையாடினர்
பெண்கள் சமைத்தனர்
என்ற
இலகு வரலாற்றை
எழுதித்தர
நான் தயாரில்லை
"நேசிப்பது
போராடுவது
பணி செய்வது”
எனும் பெண் வரலாறு
சிதையும் உளியை
கையிலெடுத்திருக்கின்றேன்
என் உளியின் முனை
தட்டும் இடமெல்லாம்
உயிர் பெறட்டும்
மிச்சம் மீதி துகள்களாகட்டும்
சமூகத்தின் சிதைவுகளை
எதிர்க்கத் துணித்ததனால்
நான் அடங்காப்பிடாரி என்றால்
அப்படியே இருக்கட்டும்
நியூட்டனின்
மூன்றாம் விதி
எடுத்துரைத்த எதிர்வினையாய்
நான்
ஏதேன் தோட்டத்தின்
இரண்டாவது பழம்
இப்போது என் கையில்
- கவிதா நோர்வே இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
eve_300பெண் புரட்சி என்பது
ஏதேன் தோட்டத்து வேலி
தகர்த்துக் கிளம்பிய
முதல் பெண்ணிலிருந்தே
தொடங்கலாம்...
ஆண்கள் வேட்டையாடினர்
பெண்கள் சமைத்தனர்
என்ற
இலகு வரலாற்றை
எழுதித்தர
நான் தயாரில்லை
"நேசிப்பது
போராடுவது
பணி செய்வது”
எனும் பெண் வரலாறு
சிதையும் உளியை
கையிலெடுத்திருக்கின்றேன்
என் உளியின் முனை
தட்டும் இடமெல்லாம்
உயிர் பெறட்டும்
மிச்சம் மீதி துகள்களாகட்டும்
சமூகத்தின் சிதைவுகளை
எதிர்க்கத் துணித்ததனால்
நான் அடங்காப்பிடாரி என்றால்
அப்படியே இருக்கட்டும்
நியூட்டனின்
மூன்றாம் விதி
எடுத்துரைத்த எதிர்வினையாய்
நான்
ஏதேன் தோட்டத்தின்
இரண்டாவது பழம்
இப்போது என் கையில்

- கவிதா நோர்வே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)