விடுமுறைகளிலும்
நீங்கள்
கைவிட்ட நிலவு
எங்கள் வீதியின்
உப்புக்கண்டம் கறி தோரணத்தில்
குதித்து ஊஞ்சலாடுகிறது.
***
வரிசை கட்டி நிற்குமிந்த
பொம்மைகளுக்குத் தீனி கொடுத்து
கதை சொல்லி
தூங்க வைக்க
இரண்டு நாட்கள் போதவில்லை
யாழினிக் குட்டிக்கு.
***
குழந்தைகளின் வழக்குகளில்
ஆஜராகும்போதே
அம்மாவையும் அப்பாவையும்
குண்டுக்கட்டாகத் தூக்கி
வெளியேற்றிவிட்டு
நீதிபதிகளாகி விடுகின்றனர்
பெற்றோர்கள் ...
- சதீஷ் குமரன்