சாம்பல் உதிர்ந்த

உன் நிழற்படத்தின் கீழ்

எப்பொழுதோ வைத்த

ஒற்றைப் பூவின் வாசனையை

இந்த அறை நிரப்பிக்கொண்டிருக்கக்கூடும்

 

உதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள் வெளியே

கொஞ்சம் கொஞ்சமாக

உன் இறுதி முடிவு பற்றிய

தத்தமது அனுமானங்களை

 

- ஆ.மீ.ஜவஹர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It