விண்மீன்கள் கண்சிமிட்ட
உன் கண்மீன்கள் இரவு
பொன் மானே நீ கவிதை
வெண்மேகத்தில் நீ நிலவு

நீ நீரெடுக்கையில் தான்
நான் நதியென்று நம்புகிறேன்
நீ காடலைகையில் தான்
நான் காட்டுத்தீயென தங்குகிறேன்

எவன் வாசித்தால் என்ன
உன் கவிதையில் நானிருக்கிறேன்
எதை நேசித்தால் என்ன
உன் அன்பில் நான்தானிருக்கிறேன்

உன் புருவங்களில்
என் மீசை இரட்டைக்கிளவி
நம் உருவங்களில்
நாமே இரட்டைப் பிறவி

அத்தனைக்கும் முத்தமிடு
அதன் சத்தத்துக்கு உன் நெத்தியிடு
குட்டி குட்டி பொட்டெல்லாம்
என் சட்டையிலே ஒட்டி விடு
கட்டிப் போட்டு கலர் கலராய்
விடுமுறையில் நெட்டை எடு

நாமிருக்கும் இடமெல்லாம்
நாம் தாம் நாமே தாம்
அரூபனா
நயம்பட சொல்கிறேன்
நற்றிணை குறுந்தொகை நாம்

- கவிஜி