நிறைதேரல் கூடென
கனக்கிறது உள்ளம்
காட்டாத அன்பால்

பால் கட்டிய மடியாய்
கடுக்கிறது நா
மொழியாத சொற்களால்

இளங்கன்றை இழுக்கும்
வடமென தெறிக்கின்றன இமைகள்
காணத் துடிக்கும் விழிகளால்

பேசப்போகிறாயா அல்லது
தொடங்கிய நானே
முடிக்கவா என பொங்குகிறது
தாங்கவியலா தன்முனைப்பு ...

- கா.சிவா