முன்னும் பின்னும் 
பயணித்தபடியே 
பயணம் 
 
எனதற்று எல்லை
விரிக்கிறது 
ரயில் சாளரம் 
 
ஏதோ ஒரு புள்ளியில் 
புன்முறுவலோடு 
திரும்பிக் கொள்கிறாள்
ஒற்றைக்கு வந்தவள் 
 
சிவப்பு கைப்பிடி 
சங்கிலியை
இழுத்துப் பார்த்தால் என்ன...
புத்தி பேதலிக்கிறது 
வழக்கமற்ற சிந்தனையில் 
 
எப்படி படுத்தும் வரவில்லை
தூக்கம்
எழுந்தமர சொக்குகிறது கவிதை 
 
கத்தி பேசி சோர்வடையும் போது
காதில் விழவில்லை 
ரயில் சத்தம்
 
விடியலில் வேறு ஊர் 
சேர்ந்திருந்தேன் 
ஊரும் சோர்ந்துதானிருந்தது
 
இரவுப்பூச்சிக்கு ரயில் எல்லாம் வால்....!
 
- கவிஜி