உன்னிடம்
கோபம் கொள்வதற்கு
ஏதேனும் காரணங்கள்
கிடைத்துக் கொண்டே தான்
இருக்கின்றன.

ஏன்
என் குறுஞ்செய்திக்கு
விடையளிக்கவில்லை என்றோ?

ஏன்
என் அலைபேசியழைப்புக்கு
பதிலளிக்கவில்லை என்றோ?

ஏன்
என்னை இவ்வளவு நேரம்
காக்க வைத்துவிட்டாய் என்றோ?

ஏன்
எனக்காக சிறிது நேரம்
காத்திருக்கவில்லை என்றோ?

காரணமற்றக் காரணங்களைத்
தேடித்தேடி கோபிக்கலாம்
உன்னிடம்!

கோபம் என்பது
அன்பின் அடையாளம்!

கோபம் என்பது
தன்னீர்ப்பு சக்தி!

கோபம் என்பது
உரிமையுணர்த்தும் மொழி!

கோபம் என்பது
பிரியத்தின் பேராசை!

- இசைமலர்