இறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளுக்கு
எதிர்த் திசையில், அவர்களின்
ஏச்சுக்களையெல்லாம் உதாசீனப்படுத்தி
ஊடுருவி ஒரு வழியாய்,
ஜன்னலோர இருக்கையைப் பிடித்து
அமர்ந்த பின்பும்
பதற்றமாகவேதான் இருக்கிறது,
பக்கத்து சீட்டுக்கும் ஒருவர் வந்து
அமரும் வரை ...
‘கொஞ்சம் மாறி உட்காருங்களேன்’
மகளிரிடம் பறிபோய் விடுமோ என்று..!

- ஆ.மகராஜன், திருச்சி